அட இவர் தான் நடிகர் அருண் விஜயின் அக்கா மகளா?…. ஹீரோயின்களுக்கு டப் கொடுக்கும் அழகில் உள்ளாரே… தனது மாமாவுடன் வெளியிட்ட புகைப்படம் இதோ….

நடிகர் அருண் விஜயின் பிறந்த நாளை முன்னிட்டு, அவரது அக்கா மகள் தனது மாமாவுடன் இணைந்து எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு வாழ்த்துக்களை கூறியுள்ளார். இப்புகைப்படம் தற்பொழுது இணையத்தில் வெளியாகி உள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் அருண் விஜய். பழம்பெரும் நடிகர் விஜயகுமாரின் மகன் என்கிற அடையாளத்தோடு தமிழ் சினிமாவில் வாரிசு நடிகராக 1995ல் சுந்தர் சி இயக்கத்தில் வெளியான ‘முறை மாப்பிள்ளை’ என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகர் அருண் விஜய்.

இதைத்தொடர்ந்து பிரியம், காத்திருந்த காதல், துள்ளி திரிந்த வானம், கண்ணால் பேசவா, முத்தம், இயற்கை, தவம், வேதா என்று எண்ணற்ற படங்களில் நடித்துள்ளார். 2012ல் தடையறத் தாக்க என்ற படத்தில் நடித்தார். இதை தொடர்ந்து மூன்று வருட இடைவெளிக்கு பிறகு தல அஜித் நடிப்பில் வெளிவந்த ‘என்னை அறிந்தால்’ படத்தின் மூலமாக வில்லனாக அவதாரம் எடுத்தார்.

இந்த படம் அவருக்கு ஒரு நல்ல ரீ எண்ட்ரியாக அமைந்தது. இதை தொடர்ந்து பல பட வாய்ப்புகள் குவியத் தொடங்கியது. குற்றம் 23, செக்கச்சிவந்த வானம், தடம், சாகோ போன்ற மாஸ் படங்களில் நடித்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றார் அருண் விஜய்.

இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த திரைப்படம் ‘சினம்’. இத்திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. இதை தொடர்ந்து ‘அச்சம் என்பது இல்லையே’ என்னும் திரைப்படத்தில் தற்போது அருண் விஜய் நடித்துக் கொண்டு வருகிறார். இயக்குனர் ஏ எல் விஜய் படத்தை இயக்குகின்றார்.

நடிகர் அருண் விஜயின் உடன் பிறந்த சகோதரிகளில் ஒருவர் அனிதா விஜயகுமார். இவர் அருண் விஜய்க்கு அக்கா ஆவார். அனிதா விஜயகுமாருக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர். இவருடைய மகள் பெயர் தியா. இவர் அண்மையில் தான் தனது பட்ட படிப்பை முடித்துள்ளார்.

இந்நிலையில் அனிதா விஜயகுமாரின் மகள் தியா தனது தாய் மாமா அருண்விஜய்க்கு  பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து  சில நாட்களுக்கு முன்பு அவருடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தையும், சிறிய வயதில் எடுத்துக் கொண்ட புகைப்படத்தையும் பதிவு செய்துள்ளார்.

இதோ அந்த புகைப்படம்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *