களைகட்டிய 80’s ரீ யூனியன் நிகழ்ச்சி….57 வயதிலும் நளினமான நடன அசைவுகளால் கலக்கல் டான்ஸ் ஆடிய நடிகை ராதா…வேற லெவல் போங்க…வீடியோ உள்ளே…

சமீபத்தில் நடந்த 80’s ரீ யூனியன் நிகழ்ச்சியில் நடிகை ராதா ஆடிய கலக்கல் டான்ஸ் வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது .

80 மற்றும் 90களில் தமிழ் சினிமாவில் கலக்கிய நடிகைகளில் ஒருவர் நடிகை ராதா. இவர் இயக்குனர் பாரதிராஜாவின் ‘அலைகள் ஓய்வதில்லை’ என்ற படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். இவர் தான் நடிக்க வந்த 6 ஆண்டுகளில் 100 படங்களுக்கு மேல் நடித்தது மட்டும் அல்லாமல் பத்து ஆண்டுகளில் 162 படங்களுக்கு மேல் நடித்து  சாதனையும் படைத்துள்ளார்.

இந்நிலையில் சமீபத்தில் நடைபெற்ற 80’s ரீ யூனியன் நிகழ்ச்சியில் நடிகை ராதாவின் நடனம் தற்பொழுது இணையத்தில் வெளியாகியுள்ளது. 80களில் திரையுலகில் முன்னணியில் இருந்த நடிகர் நடிகைகள் அதாவது தென்னிந்திய திரைபிரபலங்கள்  மற்றும் பாலிவுட் பிரபலங்கள் இணைந்து நடத்தும் 80’s ரீ யூனியன் நிகழ்ச்சி கடந்த வாரம் மும்பையில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சி தற்பொழுது 3 வருடங்களுக்குப் பிறகு நடந்துள்ளது. இதில் பாலிவுட் பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டனர். ஒவ்வொரு ஆண்டும் இந்த நிகழ்ச்சி நடப்பது வழக்கம். அந்த நாளில் அனைவரும் ஒரே நேரத்தில் உடை அணிந்து கொண்டாடுவர். இந்த ஆண்டு சில்வர் மற்றும் ஆரஞ்சு நிற உடையில் நடிகர் மற்றும் நடிகைகள் காணப்பட்டனர்.

இந்த நிகழ்ச்சியில் நடிகர்கள் ராஜ்குமார், சரத்குமார், சிரஞ்சீவி, பாக்யராஜ், வெங்கடேஷ், அர்ஜுன், ஜாக்கி ஷெராஃப், அனில் கபூர், சன்னி தியோல், சஞ்சய் தத், நரேஷ், பானுச்சந்தர் என பல முன்னணி நட்சத்திரங்கள் கலந்து கொண்டனர்.

அதேபோல நடிகைகளில் சுஹாசினி, குஷ்பூ, ரம்யா கிருஷ்ணன், லிஸ்ஸி, பூர்ணிமா, ராதா, அம்பிகா, சரிதா, சுமலதா, ஷோபனா, ரேவதி, மேனகா, பூனம் தில்லான், நதியா, ராதா, அம்பிகா பத்மினி கே, வித்யா பாலன், டினா அம்பானி, மீனாட்சி சேஷாத்திரி,  மது உள்ளிட்ட பல முன்னணி நடிகைகளும் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் நடிகை ராதா தனது நளினமான அசைவுகளால் ஆடிய கலக்கல் நடனம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. தற்பொழுது இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாக்கப்பட்டு வருகிறது.

இதோ அந்த வீடியோ….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *