நடிகர் அஜித்தின் ‘சிட்டிசன்’ திரைப்படத்தின் கதை இவரிடம் தான் முதலில் கூறப்பட்டதா?… காத்திருக்கும் படி கூறிய முன்னணி நடிகர்…கைநழுவிய பிளாக்பஸ்டர் திரைப்படம்… வைரலாகும் தகவல் இதோ…

நடிகர் அஜித் நடித்த ‘சிட்டிசன்’ திரைப்படத்தின் கதை முதலில் முன்னணி நட்சத்திரம் ஒருவரிடம் கூறப்பட்டதாக தகவல்கள் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் நடிகர் அஜித் இவர் நடிப்பில் சமீபத்தில் வலிமை திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. தற்பொழுது இவர் இயக்குனர் ஹச் வினோத் இயக்கத்தில் ‘துணிவு’ திரைப்படத்தில் நடித்துக் கொண்டு வருகிறார்.

இத்திரைப்படம் பொங்கலை முன்னிட்டு வெளியாகும் என படக்குழுவினால் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை தொடர்ந்து நடிகர் அஜித் இயக்குனர் விக்னேஷ் சிவன் கூட்டணியில் ஒரு படத்தில் நடிக்க உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இவர் தனது திரை பயணத்தில் பல பிளாக்பஸ்டர் திரைப்படங்களை கொடுத்துள்ளார்.

அப்படி அவர் நடிப்பில் வெளியான ஒரு பிளாக்பஸ்டர் ஹிட் திரைப்படம் தான் ‘சிட்டிசன்’. இத்திரைப்படம் 2001ல் வெளியானது. இயக்குனர் சரவண சுப்பையா இப்படத்தை இயக்கினார். இந்த படத்தின் கதை அஜித்திற்கு முன்பே உலகநாயகன் கமலஹாசனிடம் கூறப்பட்டதாக இணையத்தில் தகவல்கள் வெளியாகி வருகிறது.

இயக்குனர் சரவண சுப்பையா நடிகர் கமலஹாசனிடம் திரைப்படத்தின் கதையை ஒன்லைன் ஸ்டோரியாக கூறினாராம். கதை பிடித்துப்போன கமலஹாசன் ‘ஹே ராம்’ திரைப்படத்தை முடித்துவிட்டு வர சிறிது நாட்களாகும். இதனால் காத்திருக்கும் படி கூறினாராம். ஆனால் இந்த கதை நடிகர் அஜித்திடம் சென்று விட்டது. தற்பொழுது இந்த தகவல் இணையத்தில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *