‘ப்ளீஸ்!… என் அண்ணனுக்கு ஓட்டு போடுங்க’… ரசிகர்களிடம் கெஞ்சிய பிரபல நடிகை…. வைரல் பதிவு இதோ…

தமிழின் முன்னணி நடிகையான நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் பிக் பாஸ் வீட்டில் இருக்கும் தனது அண்ணனுக்கு ‘இந்த வாரம் ஓட்டு போட்டு காப்பாத்துங்க’ என்று வெளியிட்டுள்ள பதிவு தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி ஆனது தற்போது பரபரப்பாகும் விறுவிறுப்பாகவும் நடைபெற்றுக் கொண்டுள்ளது. தற்பொழுது 15 போட்டியாளர்கள் இந்த வீட்டில் இருக்கும் நிலையில் இந்நிகழ்ச்சியின் ஏழாவது வாரம் சென்று கொண்டுள்ளது. இதில் அடுத்தடுத்த நாட்களில் யார் வெளியேறுவார்கள்? என்று பிக் பாஸ் ரசிகர்கள் இப்பொழுதே யோசிக்க ஆரம்பித்து விட்டனர்.

இந்த வாரம் ஓபன் நாமினேஷன் நடந்துள்ளதால் முகத்திற்கு நேராக ஒவ்வொரு போட்டியாளர்களும் சக போட்டியாளர்கள் மீது கடுப்பில் உள்ளனர். இந்த சீசனில் முக்கிய போட்டியாளராக கலந்து கொண்டிருப்பவர் மணிகண்டன். இவர் இந்த வாரம் நாமினேஷன் லிஸ்டில் இடம் பிடித்துள்ளார்.

இந்நிலையில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தனது அண்ணனுக்கு ஆதரவாக சமூக வலைத்தளங்களில் வாக்கு சேகரித்து வருகிறார். இந்த வாரம் நாமினேஷனில் உள்ள மணிகண்டன் டேஞ்சர் சோனிலும் உள்ளார். இவருடன் அமுதவாணன், ராபர்ட் மாஸ்டர், ராம் போன்றோர் நாமினேஷனில் இடம் பிடித்துள்ளனர்.

தற்பொழுது நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்  ‘ப்ளீஸ் என் அண்ணனுக்கு ஓட்டு போட்டு காப்பாத்துங்க’ என்று தனது ரசிகர்களிடம் வேண்டுகோள் வைத்துள்ளார். தற்பொழுது நடிகை ஐஸ்வர்யா ராஜேஷின் இந்த பதிவினை பார்த்த நெட்டிசன்கள் ‘ஒரு முன்னணி நடிகையே இவ்வாறு ஓட்டு கேட்கக் கூடாது’ என்று கூறி வருகின்றனர். சிலர் இவருடைய பதிவுக்கு ஆதரவாகவும், சிலருக்கு விமர்சித்தும் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

வைரலாகும் பதிவு இதோ….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *