எஸ்பி பாலசுப்ரமணியம் அருகில் நிற்கும் இவர் யாருன்னு தெரியுமா உங்களுக்கு?… அட இவர் தமிழ் சினிமாவின் முக்கிய பிரபலமா?…

இந்திய திரை உலகின் மிக முக்கிய பாடகரான எஸ்பி பாலசுப்ரமணியம் அருகே தமிழ் சினிமாவின் முக்கிய இசையமைப்பாளர் இருக்கும் அரிதான புகைப்படம் ஒன்று தற்போது இணையத்தில் வெளியாகி உள்ளது.

இந்திய திரை உலகின் மிக முக்கிய பாடகராக விளங்கியவர் எஸ் பி பாலசுப்ரமணியம். இவர் தன் வாழ்நாளில் அதிகபட்ச பாடல்களை பதிவு செய்து கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளார். பல மொழிகளில் ஆயிரக்கணக்கான பாடல்களை பாடியுள்ளார் எஸ் பி பாலசுப்ரமணியம். இவர் ஒரு திறமையான தனது இனிமையான குரலால் பார்வையாளர்களை மயக்கும் ஆற்றலை பெற்ற ஒரு பாடகர்.

80, 90 மற்றும் 2000 ஆண்டில் ஒவ்வொரு இசையமைப்பாளர்களின் முதல் தேர்வாக இருந்தவர் எஸ்பிபி. கண்களை மூடி பாடல்களை கேட்டாலும் சரியாக கணிக்கும் வகையில் தனித்துவமான குரலை கொண்டவர். இவர் முதன் முதலில் தமிழில் 1969இல் வெளிவந்த ‘ஹோட்டல் ரம்பா’ என்னும் திரைப்படத்தில் ‘அத்தானோடு இப்படி இருந்து எத்தனை நாளாச்சு’ என்ற பாடலை பாடினார்.

அதன்பின் ‘சாந்தி நிலையம்’ என்னும் திரைப்படத்தில் எம்எஸ் விஸ்வநாதன் இசையில் ‘இயற்கை என்னும் இளைய கன்னி’ பாடலை பாடினார். 1980ல் சங்கராபரணம் என்ற திரைப்படத்தின் பாடலை பாடியதனால் இவருக்கு ‘தேசிய விருது’ கிடைத்தது. இவர் இதுவரை நான்கு மொழிகளில் 6 தேசிய விருதுகளை வாங்கியுள்ளார். மேலும் பத்மஸ்ரீ மற்றும் பத்மபூஷன் விருதுகளையும் பெற்றுள்ளார்.

இந்திய திரைப்பட பின்னணிப் பாடகரான எஸ்பிபி சுமார் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை பாடி உள்ளார். அதுவும் 16 மொழிகளில் பாடி உலக சாதனையும் படைத்துள்ளார். தமிழ் ,தெலுங்கு, கன்னடம், ஹிந்தி மற்றும் மலையாள திரைத்துறையில் சுமார் 50 ஆண்டுகளுக்கும் மேலாக வெற்றிகரமான ஒரு பாடகராக வலம் வந்துள்ளார்.

இவருடன் ஏகப்பட்ட இசையமைப்பாளர்கள் இணைந்து பணிபுரிந்துள்ளனர். அப்படி தமிழ் சினிமாவின் முக்கிய இசையமைப்பாளரான இசைத் தென்றல் தேவாவின் இசையில் ஏகப்பட்ட பாடல்களை பாடியுள்ளார் எஸ்.பி பாலசுப்ரமணியம். இந்நிலையில் எஸ் பி பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் தேவாவுடன் பணியாற்றும்போது எடுக்கப்பட்ட அழகான புகைப்படம் ஒன்று தற்பொழுது இணையத்தில் வெளியாகியுள்ளது.

இதோ அந்த புகைப்படம்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *