நடிகை கீர்த்தி சுரேஷின் பூர்வீக வீட்டை பாத்திருக்கீங்களா?… எவ்வளவு அழகா இருக்கு!… அவரே வெளியிட்ட பதிவு இதோ….

நடிகை கீர்த்தி சுரேஷ் தனது instagram பக்கத்தில் தான் சிறுவயதில் வாழ்ந்த பூர்வீக வீட்டின் புகைப்படம் மற்றும் வீடியோவை பதிவு செய்துள்ளார்.

தமிழ் சினிமாவில் குறுகிய காலத்திலேயே முன்னணி நடிகையாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ். இவர் 2000 ல் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, 2013ல் வெளியான ‘கீதாஞ்சலி’ என்னும் மலையாள திரைப்படத்தின் மூலம் திரையுலகில் ஹீரோயினாக அறிமுகமானார்.

நடிகர் விக்ரம் பிரபுவின் ‘இது என்ன மாயம்’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். தற்பொழுது விஜய், ரஜினி போன்ற முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். சமீபத்தில் இவர் நடிப்பில் மிஸ் இந்தியா, பெண் குயின்,சாவித்ரி  போன்ற திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல பாராட்டையும் வரவேற்பையும் பெற்றது.

தற்பொழுது கோலிவுட் மற்றும் ஹாலிவுட் என பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார் நடிகை கீர்த்தி சுரேஷ். இவர் நடிப்பில் ‘மாமன்னன்’ திரைப்படம் உருவாகியுள்ளது. இதே போல ஜெயம் ரவி நடிப்பில் உருவாகி வரும் ‘சைரன்’ திரைப்படத்திலும் கதாநாயகியாக நடித்துக் கொண்டு வருகிறார்.

இதை தொடர்ந்து தெலுங்கில் போலோ சங்கர் மற்றும் தசரா போன்ற படங்களில் நடித்துள்ளார். தற்பொழுது இவர் நடிப்பில் வெளிவந்து சூப்பர் ஹிட் ஆன திரைப்படம் தான் ‘மகாநதி’. இதில் பழம்பெறும் நடிகை சாவித்ரியாக நடித்து தேசிய விருது வாங்கியுள்ளார். இதைத்தொடர்ந்து ‘சாணி காகிதம்’ படத்தில் வித்தியாசமான வேடத்தில் நடித்து மக்களை கவர்ந்துள்ளார்.

சமூக வலைத்தளங்களில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கக்கூடியவர் நடிகை கீர்த்தி சுரேஷ். இவர் தனது instagram பக்கத்தில் தான் சிறுவயதில் வாழ்ந்த பூர்வீக வீட்டின் புகைப்படங்கள் மற்றும் வீடியோவை பதிவு செய்துள்ளார். தற்போது இந்த பதிவு வைரலாக்கப்பட்டு வருகிறது.

இதோ அந்த பதிவு….

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *