“நான் வீக் ஆயிட்டே இருக்கேன்… என்னால முடியல”… திடீர் என்று அழுத ஜனனி… ஆறுதல் கூறிய அமுதவாணன்…வைரல் வீடியோ இதோ…

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் 21 போட்டியாளர்கள் களமிறக்கப்பட்டனர். இவர்களில் தற்பொழுது 15 போட்டியாளர்களே எஞ்சியுள்ளனர். தொடர்ந்து இந்நிகழ்ச்சி ஏழாவது வார்த்தை எட்டியுள்ளது. இந்நிலையில் நடிகர் கமலஹாசன் பங்கு பெற்ற சென்ற வார இறுதி நிகழ்ச்சியில் அமுதவாணனை அம்பாகவும், ஜனனியை வில்லாகவும் போட்டியாளர்கள் டார்கெட் செய்து கூறியிருந்தநனர்.

தற்பொழுது பிக் பாஸ் வீட்டில் ‘பிக் பாஸ் நீதிமன்றம்’ என்ற டாஸ்க் போட்டியாளர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது. இதில் ஒவ்வொருவரும் தங்களது வழக்குகளை கூறி வருகின்றனர். ஒவ்வொருவரும் தங்கள் வழக்குகளை மெயின் டோர் கேமரா முன்பு பதிவு செய்யலாம் என கூறப்பட்டுள்ளது.

பின்னர் குற்றம் சாட்டப்பட்ட நபருக்காக வழக்கறிஞர் தேர்வு செய்து அவர் வழக்கை தயார் செய்ய வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது. முதலில் விக்ரமன் மீது வழக்கு தொடுத்தார் அமுதவாணன். தன்னை வில்லாகவும், ஜனனி அம்பாகவும் விக்ரமன் குறிப்பிட்டதாக கொடுத்த வழக்கில் ADK நீதிபதியாக செயல்பட்டார்.

இந்த வழக்கில் அசீம் வழக்கறிஞராக செயல்பட்ட இந்த வாதம் வெற்றி பெற்றது. இந்த வழக்கின் வெற்றியாளர் அவர்தான் என ADK கூறியிருந்தார். இந்நிலையில் டைனிங் டேபிளில் அமுதவானணோடு சாப்பிட்டுக் கொண்டுள்ளார் ஜனனி. அப்போது ‘இந்த வழக்கு முடிஞ்சு போச்சு அம்பு வில் யாரும் இல்லைன்னு சொல்லிட்டாங்க’ என கூற ஜனனி ‘என்னால முடியல நான் வீக் ஆயிட்டே இருக்கேன்னு தோணுது.

என் டவுட்டுகளை கிளியர் பண்ண அவர் கிட்ட நான் பேசணும். ஆனா அவரும் பேச மாட்டேங்கிறாரு அவருக்கு அது புரியவே இல்ல. நான் நார்மலா தான் இருப்பேன். திடீர்னு என்ன விட மோசமாக யாரும் இருக்க மாட்டாங்க’ என சொல்லிக் கொண்டே திடீரென அழுகிறார்.

இதை பார்த்த அமுதவாணன் ‘அழாதே, எல்லாரும் வந்து என்னன்னு கேட்பாங்க. நீ எவ்ளோ ஸ்ட்ராங்கான பொண்ணு. இதுக்கு போய் அழலாமா?’  என ஜனனியை ஆறுதல் செய்கிறார். தற்பொழுது இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

இதோ அந்த வீடியோ…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *