டோல்கேட்டில் முந்திரி விற்கும் பெண்…. அவர் சொன்னதை கேட்டு அதிர்ச்சி அடைந்த வாலிபர்…. வைரலாகும் வீடியோ…!!!!

தனது படிப்பு செலவிற்காக சாலையில் முந்திரி விக்கும் கல்லூரி பெண்ணின் வீடியோ ஆனது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. இளைஞர்கள் ஒவ்வொருவரும் தங்கள் படிப்பிற்காக கஷ்டப்படுகிறார்கள். பலர் மேற்படிப்பு படிக்க முடியாமல் வேலைக்கு செல்வதும் ஒரு சிலரை திருமணம் செய்து கொடுப்பதும் வாடிக்கையாக உள்ளது. ஆனால் பலரும் நாம் எப்படியாவது கஷ்டப்பட்டாவது படிக்க வேண்டும் என்று எண்ணி பார்ட் டைம் ஜாப் பார்த்து வருகிறார்கள்.

அதை வைத்துக்கொண்டு தங்களின் கல்லூரி தொகையை கட்டிக் கொண்டும் படிக்க வேண்டும் என்ற வைராக்கியத்துடன் இருக்கிறார்கள். ஆனால் ஒரு சில இளைஞர்கள் பெற்றோர்கள் கஷ்டப்பட்டு படிக்க வைப்பதையும் கூட மதிக்காமல் அவர்களை ஏமாற்றிக் கொண்டும் ஊர் சுற்றிக்கொண்டு இருப்பதையும் நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

அப்படிப்பட்டவர்கள் மத்தியில் ஒரு சிலர் இது வீடியோவில் வரும் பெண்மணியை போல இருக்கத்தான் செய்கிறார்கள். இணையத்தில் ஒரு வீடியோ வைரலாகி வருகின்றது. அந்த வீடியோவில் ஒரு பெண் ரோட்டில் நின்று கொண்டு முந்திரி விற்று வருகிறார். அவரிடம் சென்ற ஒரு நபர் நீங்கள் காலேஜ் படிக்கிறீர்களா? என்று கேட்க ஆமாம் என்று கூறுகிறார் . நான் பிசிஏ இரண்டாம் ஆண்டு படிக்கிறேன் என்று தெரிவித்த அவர் படிப்பு செலவிற்காக இந்த வேலை செய்து வருவதாக கூறினார். மேலும் அவரிடம் வீடியோ எடுத்த நபர் முந்திரியை வாங்கிக்கொண்டு அவருக்கு பணம் கொடுக்கிறார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *