ஆத்தாடி….! இப்படி எல்லாம் கல்யாணம் பண்ணுவீங்க…. 400 அடி உயரத்தில் அந்தரத்தில் தொங்கிக்கொண்டு திருமணம்…. வைரல் வீடியோ….!!!

400 அடி உயரத்தில் அந்தரத்தில் தொங்கிக்கொண்டு ஒரு ஜோடிகள் திருமணம் செய்து கொண்ட வீடியோவானது இணையத்தில் படு வைரலாகி வருகின்றது. இன்றைய காலகட்டத்தில் திருமணங்களை விதவிதமாக செய்து கொள்கிறார்கள். முன்பெல்லாம் திருமணம் என்பது இவ்வளவு ஆடம்பரமாக செய்யப்பட்டது கிடையாது. ஏதாவது ஒரு வீட்டில் அதுவும் பணக்காரங்களாக இருக்கும் யாராவது ஒருவர் வீட்டில் தான் திருவிழா போல் திருமணம் செய்வார்கள்.

இப்போது எல்லோரும் தங்களது திருமணங்களை மிகவும் விமர்சையாக செய்ய வேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள். வித விதமாக திருமணம் செய்கிறார்கள். கடற்கரையில் திருமணம், ஹெலிகாப்டரில் திருமணம் என்று பலவிதமாக திருமணம் செய்து பார்த்திருப்போம்.

இங்கு ஒரு வீடியோ இணையத்தில் படுவைரலாகி வருகின்றது. அதாவது 400 அடி உயரத்தில் கயிறுகளால் கட்டிக்கொண்டு அந்தரத்தில் சிலந்தி வலை போன்று ஒரு அமைப்பை உருவாக்கி அதற்கு மேல் நின்று ஒரு ஜோடி திருமணம் செய்து கொள்கின்றது. இது பார்ப்பதற்கே மிகவும் பயமாக உள்ளது .ஆனால் அவர்கள் சற்றும் பயப்படாமல் இப்படி ஒரு திருமணத்தை செய்து முடித்துள்ளார்கள். இந்த வீடியோ படு வைரலாகி வருகின்றது. இதனை நீங்களும் பாருங்கள்…

 

View this post on Instagram

 

A post shared by Happier Humans (@happier_humans.ig)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *