நீண்ட நாட்களுக்கு பிறகு நடிகர் சிவகார்த்திகேயன் சந்தித்த முக்கிய பிரபலம்… இதுதான் காரணமா… அவரை வெளியிட்ட பதிவு உள்ளே….

நடிகர் சிவகார்த்திகேயன் முக்கிய பிரபலம் ஒருவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

விஜய் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக தனது வாழ்க்கையை தொடங்கியவர் நடிகர் சிவகார்த்திகேயன். இவர் தமிழ் திரையுலகில் ”மெரினா” என்ற திரைப்படம் மூலம் அறிமுகமானார். இதை தொடர்ந்து 3, மனம் கொத்தி பறவை, கேடி பில்லா கில்லாடி ரங்கா, வருத்தப்படாத வாலிபர் சங்கம் போன்ற திரைப்படங்களில் நடித்து பிரபலமானார்.

தற்பொழுது இவர் எண்ணற்ற திரைப்படங்களை நடித்து முன்னணி நடிகராக வலம் வருகிறார். இவரது படங்களுக்கு எப்பொழுதும் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பு அளிக்கப்படுகிறது. சமீபத்தில் இயக்குனர் ரவிக்குமார் இயக்கத்தில் சயின்ஸ் பிக்சன் ஏலியன் திரைப்படமான ‘அயலான்’ திரைப்படம் சிவகார்த்திகேயன் நடிப்பில் நிறைவடைந்து ரிலீசுக்கு தயாராகி உள்ளது.

இதை தொடர்ந்து அவர் இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் ‘மாவீரன்’ திரைப்படத்தில் தற்போது நடித்துக் கொண்டு வருகிறார். அடுத்ததாக கமலஹாசன் ராஜ்கமல் ஃபிலிம் என்ற நேஷனல் தயாரிக்கும் புதிய படம் ஒன்றில் சிவகார்த்திகேயன் நடிக்க உள்ளதாக தகவல்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களில்  ஒருவரான அதல ஜித் குமாரை நேரில் சென்று சந்தித்து புகைப்படம் எடுத்துக் கொண்டுள்ளார். நடிகர் அஜித்குமார் தற்பொழுது ‘துணிவு’ திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படம் பொங்கலுக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்பொழுது நடிகர் அஜித்குமார் மற்றும் நடிகர் சிவகார்த்திகேயன் சந்தித்தபோது எடுத்துக் கொண்ட புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. மேலும் இந்த புகைப்படத்தை நடிகர் சிவகார்த்திகேயன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

அதில் அவர்’ நீண்ட இடைவெளிக்கு பின்னர் AK சாரை சந்தித்தேன். என் வாழ்க்கையில் ஒரு உன்னதமான சந்திப்பு. உங்களுடைய வாழ்த்துக்களுக்கும் பாசிட்டிவான வார்த்தைகளுக்கும் மிக்க நன்றி சார்’ என்று கூறியுள்ளார். நடிகர் சிவகார்த்திகேயனின் இந்த பதிவானது வைரலாகி வருகிறது.

இதோ அந்த பதிவு…

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *