‘உன் ஆளு இவர் தான் தெரியும்.. வெளிய போய் கல்யாணம் பண்ணிக்கோங்க’… சிவினிடம் கூறிய தனலட்சுமி… பிக் பாஸ் வீட்டில் நள்ளிரவில் நடந்த உரையாடல்…

பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி ஆனது தற்பொழுது பரபரப்புக்கும் விறுவிறுப்புக்கும் பஞ்சம் இல்லாமல் சென்று கொண்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் தங்களது முழு பங்களிப்பையும் அளித்து வருகின்றனர். மேலும் அவர்கள் தங்களது நிஜ முகத்தையும் தற்போது காட்ட தொடங்கியுள்ளனர்.

அந்த வகையில் 21 போட்டியாளர்களுடன் தொடங்கப்பட்ட இந்த நிகழ்ச்சியில் ஜி பி முத்து, சாந்தி, அசல்கோளாறு, மகேஸ்வரி, நிவாஷினி என அடுத்தடுத்த போட்டியாளர்கள் வீட்டிலிருந்து வெளியேற தற்பொழுது 15 போட்டியாளர்கள் மட்டுமே உள்ளனர். இந்த சீசனின் முதல் ஓபன் நாமினேஷன் சமீபத்தில் நடைபெற்றது.

 

இதை தொடர்ந்து சக போட்டியாளர்களுக்கு இடையே மன வருத்தம் ஏற்பட்டுள்ளது. இந்த வார டாஸ்கின்படி பிக் பாஸ் வீடு பிக் பாஸ் நீதிமன்றமாக செயல்பட்டு வருகிறது. இதில் ஒவ்வொரு வழக்கும் விறுவிறுப்பாக விசாரிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இரவு நேரத்தில் அமுதவாணன், சிவின், தனலட்சுமி , ஜனனி நால்வரும் இணைந்து பேசிக் கொண்டிருந்த விஷயம் ஒன்று தற்பொழுது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

இவர்கள் நால்வரும் விக்ரமன் மற்றும் சிவின் பற்றி பேசிக்கொண்டுள்ளனர். ‘உன் ஆளு விக்ரமன்னு தெரியும்’ என தனலட்சுமி சிவினிடம் கூறியுள்ளார். தொடர்ந்து இதைப்பற்றி விவாதித்த சிவின், ஜனனி, அமுதவாணன், தனலட்சுமி பேசிக்கொண்டு உள்ளனர். இறுதியாக பேசும் தனலட்சுமி ‘வெளியே போய் இரண்டு பேரும் கல்யாணம் பண்ணிக்கோங்க’ என்று கூறுகின்றார். தற்பொழுது இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

இதோ அந்த வீடியோ….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *