நடிகை ரம்பாவின் மகனா இது?… இவ்வளவு பெருசா வளந்துட்டாரே!… வீடியோ இதோ….

நடிகை ரம்பா மகனின் சமீபத்திய புகைப்படம் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது.

தமிழின் முன்னணி நடிகைகளில் ஒருவர் நடிகை ரம்பா. இவர் திரையுலகை விட்டு விலகி இருந்தாலும் இன்றளவும் ரசிகர்கள் மத்தியில் அதே பிரபலத்துடன் தான் காணப்படுகிறார். நடிகை ரம்பா ‘சுந்தர புருஷன்’ படம் மூலம் தமிழ் திரை உலகில் அறிமுகமானார். இவர் நடித்த ”உள்ளத்தை அள்ளித்தா” திரைப்படம் இவருக்கு மிகப்பெரிய அடையாளத்தை ஏற்படுத்தி தந்தது.

இதை தொடர்ந்து அவர் செங்கோட்டை, அருணாச்சலம், ராசி, விஐபி, நினைத்தேன் வந்தாய், காதலா காதலா, மின்சார கண்ணா, ஆனந்தம் உட்பட பல ஹிட் படங்களிள் நடித்துள்ளார். தெலுங்கு மற்றும் ஹிந்தி, மலையாள படங்களிலும் நடித்துள்ளார். ரம்பாவுக்கும் கனடாவை சேர்ந்த இந்திரகுமார் பத்மநாதனுக்கும் 2010ல் திருமணம் நடைபெற்றது.

இவர்களுக்கு இரண்டு மகள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். திருமணத்தை தொடர்ந்து திரையுலகில் இருந்து விலகிய இவர் தனது குடும்பத்துடன் நேரத்தை செலவிட்டு வருகிறார். சமூக வலைத்தளங்களில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கக் கூடியவர். இவர் அவ்வப்போது தனது குழந்தைகளுடன் இருக்கும் புகைப்படங்களும் வீடியோக்களையும் இணையத்தில் பதிவு செய்து வருகிறார்

சமீபத்தில் இவர் தனது மகன் இளைய தளபதி விஜய்யின் அரபிக்குத்து குத்து பாடலுக்கு குத்து டான்ஸ் ஆடிய வீடியோ ஒன்றை தனது இணையதள பக்கத்தில் பகிர்ந்து அந்த வீடியோ வைரலானது. தற்போது அவர் தன்னுடைய மகனுடன் இருக்கும் அழகான வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார்.

இதில் நடிகை ரம்பாவின் மகன் நன்றாக வளர்ந்து காணப்படுகிறார். இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் ‘நடிகை ரம்பாவின் மகனா இது?… இவ்வளவு பெருசா வளர்ந்துட்டாரே’ என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.

இதோ அந்த வீடியோ…

 

View this post on Instagram

 

A post shared by RambhaIndrakumar💕 (@rambhaindran_)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *