நடிகர் விஜய்யின் கையில் இருக்கும் இந்த சிறு பிள்ளை யாருன்னு தெரியுமா?… என்னது இவர் ஒரு முன்னணி நடிகையா?…

பிரபல முன்னணி நடிகை ஒருவர் நடிகர் விஜய் உடன் சிறுவயதில் எடுத்துக் கொண்ட புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி உள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரமாக விளங்கி வருபவர் தளபதி விஜய். இவர் நடிப்பில் தற்பொழுது வம்சி இயக்கத்தில் ‘வாரிசு’ திரைப்படம் உருவாகி வருகிறது. சமீபத்தில் இப்படத்தின் ‘ரஞ்சிதமே’ பாடல் வெளியாகி செம வைரலானது. ஒருபக்கம் பாடல் ஹிட் அடிக்க, மற்றொரு புறம் இப்பாடல் ‘மொசைக் கொட்ட பல்லழகி’ பாடலின்    டப்பிங் எனவும் விமர்சனம் செய்யப்பட்டது.

எனினும் ரஞ்சிதமே பாடல் எதிர்பாராத அளவிற்கு சாதனை படைத்துள்ளது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்து அசத்தியுள்ளார். இதைத் தொடர்ந்து நடிகர் விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ‘தளபதி 67’ படத்தில் நடிக்க உள்ளார். இதற்கான அறிவிப்பை எதிர்பார்த்து ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

இந்நிலையில் பிரபல முன்னணி நடிகை ஒருவர் நடிகர் விஜய் உடன் எடுத்துக் கொண்ட புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி உள்ளது. அந்த நடிகை தனது சிறு வயதில் இருக்கும் பொழுது நடிகர் விஜய் அவரை தூக்கி வைத்திருக்கும் புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது. இந்த புகைப்படத்தில் இருக்கும் அந்த நடிகை வேறு யாரும் இல்லை.

தற்பொழுது சின்ன திரையில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருக்கும் ஹிமா பிந்து என்பவர் தான். அவர் தனது சிறுவயதில் விஜயுடன் எடுத்துக் கொண்ட புகைப்படம் தான் அது. நடிகை ஹிமா பிந்து சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ‘இலக்கியா’ சீரியலில் நடித்துக் கொண்டு வருகிறார்.

இதற்கு முன்னர் அவர் ‘இதயத்தை திருடாதே’ என்னும் சீரியலில் கதாநாயகியாக நடித்து பிரபலமானார். தற்பொழுது இவர் நடிகர் விஜயுடன் சிறுவயதில் எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *