கோமாவுக்கு சென்ற பிரபல சீரியல் நடிகர்…இப்ப எப்படி இருக்காருன்னு தெரியுமா உங்களுக்கு?…’அந்த பாவம் தான் காரணம்’…வைரலாகும் நேர்காணல் இதோ…

சீரியல் நடிகர் வேணு அரவிந்த் உடல்நிலை குறித்து அளித்த பேட்டி ஒன்று தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

நடிகர் வேணு அரவிந்த் 90’s காலகட்டத்தில் ஒரு முன்னணி நடிகராக வலம் வந்தவர். இவர் தமிழில் ‘முத்து எங்கள் சொத்து” படம் மூலம் அறிமுகமானார். இவர் நடிகராக மட்டுமல்லாமல் இயக்குனராகவும் பணிபுரிந்துள்ளார். ‘சபாஷ் சரியான போட்டி’ என்கிற படத்தை இயக்கியுள்ளார். மேலும் ‘பகல் நிலவு’ என்ற படத்தில் நடித்துள்ளார்.

வெள்ளித்திரையை தொடர்ந்து சின்ன திரையில் ‘நிலா பெண்’ சீரியல் மூலம் அறிமுகமானார். இதைத்தொடர்ந்து காஸ்ட்லி மாப்பிள்ளை, கிரீன் சிக்னல், ரிஷி மூலம், அலையோசை, வாழ்க்கை அலைகள் உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்துள்ளார். இவர் தொடர்ந்து கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக தொலைக்காட்சி தொடர்களில் மட்டுமே நடித்துக் கொண்டு வருகிறார்.

நடிகை ராதிகாவின் ‘வாணி ராணி’ சீரியலில் அவரின் கணவராக நடித்திருந்தார். இவர் நடித்த சீரியல்கள் இன்றுவரை மக்கள் மத்தியில் பிரபலமாகவே உள்ளன. இந்த சீரியல்களை மக்கள் அவ்வளவு எளிதாக மறந்திருக்க மாட்டார்கள். இவர் சில மாதங்களுக்கு முன்பு கொரோனாவால் பாதிக்கப்பட்டு அதிலிருந்து குணமடைந்தார். ஆனால் குணமடைந்து சில நாட்களிலேயே நிமோனியா வந்தது.

அதற்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் அவருக்கு மூளையில் கட்டி இருப்பதை கண்டறிந்து உடனே அறுவை சிகிச்சை மேற்கொண்டனர். இதனால் அவர் கோமாவுக்கு சென்று விட்டதாக செய்திகள் வெளியாக தொடங்கியது. இதை தொடர்ந்து தற்பொழுது அவர் தனது உடல்நிலை குறித்து நேர்காணல் ஒன்றை அளித்து உள்ளார்.

 

அப்பேட்டியில்  ‘நான் இப்பொழுது உயிரோடு இருக்கிறேன். இனிமேல் என்ன நடக்கப்போகிறது என்பதை மட்டும் பார்க்கலாம். எனக்கு தலையில் சின்ன கட்டி இருந்தது. அதை நீக்கி விட்டார்கள். இப்போது நலமாக உள்ளேன். நான் நிறைய வில்லனாக நடித்து பலரின் பாவத்தை சம்பாதித்ததால் தான் எனக்கு இப்படி நடக்கிறதோ? என்று நினைக்கிறன்’ என குறிப்பிட்டுள்ளார். தற்பொழுது இந்த பேட்டி வைரலாகி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *