நடிகர் ஜெயம் ரவியின் இரண்டாவது மகனை பாத்துருக்கீங்களா?… அச்சு அசலாய்  தந்தையை போலவே இருக்கும் மகன்…. தீயாய் பரவும் புகைப்படம் இதோ… 

நடிகர் ஜெயம் ரவியின் இரண்டாவது மகனான அயான் ரவியின் புகைப்படம் தற்பொழுது இணையத்தில் வெளியாகி உள்ளது.

தமிழ் சினிமாவில் தனித்துவமான படங்களை தேடித் தேடி நடிப்பவர் நடிகர் ஜெயம் ரவி. இவர் நடிப்பில் தற்போது ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படம் வெளியாகி மாபெரும் வெற்றியை பெற்றுள்ளது. இதைத்தொடர்ந்து இவர் அகிலன், சைரன், இறைவன் என பல படங்களில் நடித்துக் கொண்டு வருகிறார்.

இவர் தனக்கென்று தனி ரசிகர் பட்டாளத்தையே கொண்டுள்ளார். இவருடைய குடும்ப வாழ்க்கையை பற்றி பார்க்கும் பொழுது நடிகர் ஜெயம் ரவி 2009ல் ஆரத்தி என்பவரை பிரம்மாண்டமான முறையில் திருமணம் செய்து கொண்டார். இத்தம்பதியினருக்கு இரண்டு ஆண் பிள்ளைகள் உள்ளனர்.

இவரது மூத்த மகன் ஆரவ் தன் தந்தை ஜெயம் ரவியுடன் இணைந்து டிக் டிக் திரைப்படத்தில் நடித்துள்ளார். ஆனால் நாம் நடிகர் ஜெயம் ரவியின் இரண்டாவது மகனை பார்த்திருக்க முடியாது. இவரின் புகைப்படங்கள் பெரும்பாலும் இணையத்தில் வெளியாகியது இல்லை.

தற்பொழுது நடிகர் ஜெயம் ரவி தனது குடும்பத்துடன் எடுத்துக்கொண்ட அழகான குடும்ப புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது. இதில் ஜெயம் ரவியின் இரண்டாவது மகன் அயான் ரவியைப் பார்த்த ரசிகர்கள் ‘ஜெயம் ரவியின் இரண்டாவது மகனா இது? தந்தையை போலவே அச்சு அசலாய் பார்ப்பதற்கு இருக்கிறாரே’ என்று  கமெண்ட் செய்து வருகின்றனர்.

இதோ அந்த புகைப்படம்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *