“பையன் ஃப்யூச்சர்ல பெரிய கிக் பாக்ஸரா வருவா சார்”….! ஒரே உதை பறந்து போன செல்போன்…. வைரல் வீடியோ….!!!

குழந்தை ஒன்று தனது தந்தையின் செல்போனை எட்டி உதைக்கும் வீடியோவானது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. குழந்தைகள் எது செய்தாலும் அது அழகாகத் தான் இருக்கும்.  தற்போதயெல்லாம் இணையத்தை திறந்தாலே குழந்தைகள் செய்யும் அட்ராசிட்டி தொடர்பான வீடியோக்கள் தான் அதிகமாக உள்ளது. இன்றைய காலத்தில் பெற்றோர்கள் தங்களது குழந்தைகளுடன் நேரம் செலவிடுவது கிடையாது.

எப்போது பார்த்தாலும் வேலை, அதை விட்டால் செல்போன் என்று நோண்டிக் கொண்டு இருக்கிறார்கள். அவர்களுக்கு ஊட்டும் போது கூட ஒரு கையில் உணவு மற்றொரு கையில் செல்போனை வைத்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். குழந்தைகளுடன் விளையாடினால்தானே குழந்தைங்களுக்கும் பெற்றோர்களுக்கும் ஒரு அன்பு ஏற்படும்.

அப்படி ஒரு வீடியோ தான் தற்போது வைரலாகி வருகின்றது. ஒரு சோபாவில் அவரது தந்தை செல்ஃபோனை நோண்டிக் கொண்டுள்ளார். அவரது அருகில் ஒரு குழந்தை நின்று கொண்டு அப்பா, அப்பா என்று அழைத்துக் கொண்டே உள்ளார். ஆனால் அந்த தந்தை எதையும் கண்டு கொள்ளாமல் தொடர்ந்து செல்போனை நோண்டிக் கொண்டே இருந்துள்ளார். இதை பார்த்துக் கொண்டிருந்த சிறு பையன் அந்த செல்போனை தனது காலால் ஒரே ஒரு உதை வைக்க செல்போன் பறந்து போய் விழுந்துவிட்டது. இது பார்க்கும்போது சிரிப்பாக இருந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *