தனது மருமகள் குறித்து மனம் திறந்த நடிகை நயன்தாராவின் மாமியார்…. இப்படி சொல்லிட்டாங்களே… வீடியோ உள்ளே…

நடிகை நயன்தாராவின் மாமியாரும் மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவனின் தாயார் தனது மருமகள் குறித்து மனம் திறந்து கூறிய தகவல்கள் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது.

நடிகை நயன்தாரா இவர் தமிழ் சினிமாவின் இந்திய திரையுலகின் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக விளங்குகிறார். இவர் தனது ரசிகர்களால் ‘லேடி சூப்பர் ஸ்டார்’ என்றும் அழைக்கப்படுகிறார். இவர் 2003 இல் வெளியான ‘மனசினகாரே’ என்ற மலையாள மொழி திரைப்படம் மூலம் திரைத்துறையில் அறிமுகமானார்.

தொடர்ந்து பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்து வருகிறார். தற்பொழுது இவர் பெண்களை மையமாக கொண்டு எடுக்கப்படும் கதைகளை மிக கவனமாக கேட்டு தேர்ந்தெடுத்து நடித்துக் கொண்டு வருகிறார்.மேலும் இவர் நடிப்பில் தற்போது கனெக்ட், கோல்ட், நயன்தாரா 75,  இறைவன், ஜவான் போன்ற திரைப்படங்கள் உருவாகிக் கொண்டு வருகிறது.

இவர் இயக்குனர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொண்டு வாடகை தாய் மூலம் தற்பொழுது இரண்டு குழந்தைகளை பெற்றெடுத்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.ஒருபுறம் நடிப்பு மறுபுறம் குடும்பம் என நடிகை நயன்தாரா தற்பொழுது பிஸியாக உள்ளார்.இந்நிலையில் நடிகை நயன்தாராவை பற்றி அவரது மாமியார் சில தகவல்களை இணையத்தில் பகிர்ந்துள்ளார்.

அவர் குறிப்பிடும் பொழுது, ‘நயன்தாரா வீட்டில் எட்டு வேலைக்காரர்கள் இருக்கின்றனர். நான்கு ஆண், நான்கு பெண்.அயன் பண்ணுதல், சமைத்தல், பாத்திரம் கழுவுதல் என அனைத்திற்கும் தனித்தனிாக ஆள் வைத்துள்ளார். ஒருமுறை வேலை செய்யும் பெண் ஒருவர் சோகமாக இருந்த நிலையில்,  அவரிடம் நயன்தாரா விசாரித்ததாகவும் அதற்கு அந்த பெண் 4 லட்சம் கடனாக இருப்பதாகவும், கடும் சிரமமாக இருப்பதாகவும் கூறியுள்ளார்.

 

உடனே சற்றும் யோசிக்காத நயன்தாரா, அவருக்கு 4 லட்சத்தினை உடனே கொடுத்துள்ளார். பின்பு ஒரு நாள் நயன்தாரா தாய் வீட்டிற்கு வரும்போது, அவர் தனது கையில் இருந்த தங்க வளையல் இரண்டை கழற்றி அந்த வேலைக்கார பெண்ணிற்கு போட்டுவிட்டதாகவும்’ குறிப்பிட்டுள்ளார்  நயன்தாராவின் மாமியார். தற்பொழுது இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

இதோ அந்த வீடியோ…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *