திருமண தேதியை அறிவித்த கௌதம் கார்த்திக் – மஞ்சிமா மோகன் ஜோடி…. எளிமையான முறையில் திருமணம்… வாழ்த்து கூறும் ரசிகர்கள்….

நடிகர் கௌதம் கார்த்திக் மற்றும் மஞ்சிமா மோகன் இருவரும் செய்தியாளர்களை சந்தித்து தங்களது திருமண தேதியை அறிவித்துள்ளனர். இந்த வீடியோ தற்பொழுது இணையத்தில் வெளியாகி உள்ளது.

நவரச நாயகன் நடிகர் கார்த்திக்கின் மகன் தான் கௌதம் கார்த்திக். இவர் இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உருவான ‘கடல்’ திரைப்படம் மூலம் திரையுலகில் அறிமுகமானார். ஆரம்பத்தில் இவரின் படங்கள் பெரிய அளவில் வெற்றி அடையவில்லை என்றாலும் திரைத்துறையில் ஜெயிக்க தொடர்ந்து முயற்சித்து வருகிறார் .

இந்நிலையில் ‘தேவராட்டம்’ திரைப்படத்தில் தன்னுடன் இணைந்து நடித்த மஞ்சிமா மோகன் கௌதம் கார்த்திக் காதலித்து வருவதாக சமூக வலைத்தளங்களில் கிசுகிசுக்கப்பட்டது. இவர்களின் காதலுக்கு இரு வீட்டாரும் பச்சைக்கொடி காட்டி விட்டதால் இருவரும் வெளிப்படையாகவே காதலித்து வந்தனர்.

இந்நிலையில் தற்பொழுது நடிகர் கௌதம் கார்த்திக் மற்றும் மஞ்சிமா மோகன் இருவரும் தங்களுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர்களின் காதலை பற்றி அதிகாரப்பூர்வமான அறிவிப்பை பதிவு செய்தனர். இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த கௌதம் கார்த்திக் இன்று ஒரு சந்தோஷமான செய்தியை சொல்வதற்காக உங்களை இங்கு அழைத்திருக்கிறோம்.

அந்த செய்தி என்னவென்றால் நவம்பர் 28ஆம் தேதி எனக்கும் மஞ்சிமாவுக்கும் திருமணம் நடைபெற உள்ளது’ என்று கூறினார். மேலும் சென்னையில் உள்ள தனியார் ஹோட்டலில் எங்களது திருமணம் நடைபெற உள்ளது. நான் நடிக்க வந்த ஆரம்ப காலகட்டத்தில் இருந்து எனக்கு பெரிய உறுதுணையாக இருந்தவர்கள் என்னுடைய ரசிகர்கள்.

மீண்டும் திருமணத்திற்கு பிறகு உங்களை சந்திக்கிறேன்’ என்று கூறினார். இதை தொடர்ந்து பேசிய நடிகை மஞ்சிமா மோகன் நவம்பர் 28 காலை எனக்கும் கௌதம் கார்த்திக் திருமணம் நடைபெற உள்ளது. மிக எளிமையாகவும் சிறப்பாகவும் எங்கள் திருமணம் நடைபெறும். வரவேற்பு நிகழ்ச்சி கிடையாது.

எங்களால் முடிந்தவரை எங்களுடைய திருமண புகைப்படங்களை வெளியிட முயற்சி செய்கிறோம்’ என்று கூறியுள்ளார். இதை தொடர்ந்து செய்தியாளர்கள் கேட்ட பல கேள்விகளுக்கும் பொறுமையாக பதில் அளித்தனர். இந்த ஜோடி தற்பொழுது இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் இவர்களுக்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

இதோ அந்த வீடியோ….

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *