‘லவ் டுடே’ பிரதீப் ரங்கநாதனின் அழகான குடும்பத்த பாத்திருக்கீங்களா?… இதுவரை நீங்கள் பார்த்திடாத புகைப்படம் இதோ…

நடிகர் பிரதீப் ரங்கநாதனின் குடும்ப புகைப்படம் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

‘கோமாளி’ திரைப்படத்தின் மூலம் தமிழ் திரை துறையில் அறிமுகமானவர் நடிகரும் இயக்குனருமான பிரதீப் ரங்கநாதன். இவர் இந்த படத்தை இயக்கி அதில் தானே நடித்தும் உள்ளார். இவரின் ‘கோமாளி’ திரைப்படம் ஒரு மாறுபட்ட கதைக்களத்துடன் ரசிகர்களை கவர்ந்தது. இதைத் தொடர்ந்து தற்பொழுது இவர் ‘லவ் டுடே’ திரைப்படம் மூலம் ஹீரோவாகவும் இயக்குனராகவும் மிகப் பிரபலமடைந்துள்ளார்.

இத்திரைப்படம் கடந்த 4ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இதுவரை ஹிட் ஆக ஓடிக் கொண்டுள்ளது. இத்திரைப்படம் 2K காலத்து காதல் கதையை மிகவும் தத்துரூபமாக எடுத்துரைக்கிறது. இதனால் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு பெற்றுள்ளது இத்திரைப்படம்.

‘லவ் டுடே’ திரைப்படத்தில் இவருக்கு ஜோடியாக நடிகை இவானாவும், ராதிகா, சத்யராஜ் போன்ற முன்னணி நட்சத்திரங்களும் நடித்துள்ளனர்.இத்திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. திரையரங்குகளில் கூட்டம் அலைமோதி வருகிறது. இந்நிலையை அடைய பிரதீப் ரங்கநாதன் நிறைய முயற்சி செய்துள்ளார்.

இவர் தனது பல பேட்டிகளில் தனது அம்மா அப்பாவை பற்றி கூறியுள்ளார். ஆனால் இவரின் அண்ணன் மற்றும் தங்கையை நாம் பார்த்திருக்க வாய்ப்பில்லை .தற்பொழுது இவர் தனது அம்மா, அப்பா, அண்ணன் மற்றும் தங்கையுடன் இருக்கும் அழகான குடும்ப புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது. தற்பொழுது இந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.

இதோ அந்த புகைப்படம்….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *