அட.. இவர்கள்தான் நடிகர் நம்பியாரின் மனைவி மற்றும் குழந்தைகளா?… இதுவரை நீங்கள் பார்த்திடாத அரிய புகைப்படம் இதோ….

மறைந்த பிரபல நடிகர் நம்பியாரின் அழகான குடும்ப புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

கிட்டத்தட்ட 60 ஆண்டுகளுக்கும் மேல் தமிழ் சினிமாவின் தலைசிறந்த நடிகர்களில்  ஒருவராக இருந்தார் நம்பியார். கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டத்தைச் சேர்ந்த மஞ்சேரி நாராயணன் நம்பியார் என்ற எம் என் நம்பியார் தனது 13 வயதிலேயே சென்னை ராஜமாணிக்கம் குழுவில் சேர்ந்து நாடகங்களில் நடித்தார்.

1935ல் ‘பக்த ராமதாஸ்’ என்ற படத்தின் மூலம் தன் திரையுலக பிரவேசத்தை தொடங்கினார்.மக்கள் திலகம் அமரர் எம்ஜிஆர், நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் படங்களிலும் நிரந்தர வில்லன் நடிகராக இடம்பெற்றார் நம்பியார். இவர்களின் மிக நெருங்கிய நண்பராகவும் இருந்தார்.

இவர் நடிக்காத எம்ஜிஆர் படங்களை விரல் விட்டு எண்ணி விடலாம். ‘வில்லனுக்கு வில்லன்’ என்ற பட்ட பெயரை இவருக்கு உண்டு.இவர் ஒரு காலத்தில் தமிழ் சினிமாவை கட்டி ஆண்டவர். தற்பொழுது இவரின் குடும்பம் பற்றிய தகவல்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.

நம்பியார் 1946ல் தன்னுடைய உறவுக்கார பெண்ணான ருக்மணி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இத்தம்பதிக்கு ஒரு மகள் மற்றும் இரண்டு மகன்கள் உள்ளனர். நடிகர் நம்பியார் தன் குடும்பத்தோடு எடுத்துக் கொண்ட அழகான குடும்ப புகைப்படம் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

இதோ அந்த புகைப்படம்….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *