‘அப்படி பாக்காதீங்க’… வசீகர சிரிப்பால் ரசிகர்களை கவர்ந்திழுத்த ‘லவ் டுடே’ திரைப்பட நடிகை…லேட்டஸ்ட் கிளிக்ஸ் இதோ….

‘லவ் டுடே’ திரைப்பட நடிகை இவானாவின் சமீபத்திய புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

மலையாள சினிமாவின் மூலம் திரைத்துறையில் அறிமுகமானவர் நடிகை இவானா. இவர் பாலா இயக்கத்தில் வெளியான ‘நாச்சியார்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்தார். தொடர்ந்து இவர் சில படங்களில் நடித்திருந்தாலும் இவருக்கான சரியான அங்கீகாரம் கிடைக்கவில்லை.

 

இதை தொடர்ந்து தற்பொழுது ‘லவ் டுடே’ படத்தில் பிரதீப்புக்கு ஜோடியாக நடித்துள்ளார். தற்பொழுது உள்ள இளைய சமுதாயத்தில் காதலில் எப்படி பார்க்கப்படுகிறது என்பதை இப்படம் காட்டுகிறது. காதல் ஜோடிகள் செல்போனை மாற்றிக் கொண்டால் என்னென்ன பிரச்சனைகள் வரும் என்பதை தெள்ளத் தெளிவாக காட்டுகிறது.

இத்திரைப்படம் தற்பொழுது இளைஞர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகிறது. தற்பொழுது இளைஞர்களின் கனவு கன்னியாக மாறி உள்ளார் நடிகை இவானா. இவருக்கு தற்பொழுது லவ் டுடே திரைப்படம் மூலமாக ரசிகர்கள் கூட்டம் அதிகரித்து வருகிறது. 5 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் இதுவரை ரூபாய் 50 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்து வருகிறது

சமூக வலைத்தளங்களில் தற்போது ஆக்ட்டிவாக இருக்கிறார் நடிகை இவானா. இவர் தற்பொழுது வயலட் நிற புடவையில் தேவதையாய் ஜொலிக்கும் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

இதோ அந்த புகைப்படம்…

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *