‘பாரதி கண்ணம்மா’ சீரியல் பரீனாவின் முகத்துல என்னாச்சு?…. புகைப்படத்தை பார்த்து பதறும் ரசிகர்கள்….

‘பாரதி கண்ணம்மா’ சீரியல் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து வரும் நடிகை பரீனாவின் முகத்தில் தீக்காயங்கள் இருப்பது போன்ற புகைப்படம் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘பாரதி கண்ணம்மா’ சீரியல் தற்பொழுது முடிவு கட்டத்தை எட்டி உள்ளது. இந்த சீரியல் பாரதி, கண்ணம்மா, அவர்களுடைய  இரண்டு குழந்தைகளை சுற்றி தான் கதை நகர்ந்து கொண்டுள்ளது. தற்பொழுது இந்த சீரியல் எப்பொழுது முடிவுக்கு வரும் என்று ரசிகர்களாக எதிர்பார்த்து காத்துக் கொண்டுள்ளனர்.

இந்த சீரியலில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் தான் நடிகை பரினா. இந்த சீரியலில் ஹீரோ ஹீரோயின் எவ்வளவு முக்கியமோ அந்த அளவிற்கு வில்லி கதாபாத்திரம் முக்கியமாக காணப்படுகிறது.  இவரை தவிர இந்த கதாபாத்திரத்தை யாராலும் சிறப்பாக நடித்திருக்க முடியாது. அந்த அளவிற்கு இவர் தனது சிறப்பான நடிப்பினை வெளிப்படுத்தியுள்ளார்.

இந்த தொடரில் அடுத்த மாதம் அனைத்து உண்மைகளும் பாரதிக்கு தெரிய வந்துவிடும் என கூறப்படுகிறது. ஆனால் இது எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை. தற்பொழுது நடிகை பரீனா வெளியிட்டுள்ள புகைப்படம் ஒன்று ரசிகர்கள் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. அந்த புகைப்படத்தில் அவர் தனது முகத்தில் தீக்காயங்களுடன் காணப்படுகிறார்.

இதை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.ஆனால் இந்த வீடியோவும் புகைப்படங்களும் உண்மை இல்லை என்பது தற்பொழுது தெரியவந்துள்ளது. அதாவது இவர் MR AND MRS  சின்னத்திரை நிகழ்ச்சிக்காக தான் அப்படி ஒரு மேக் அப் போட்டுள்ளார் என அவரே தனது instagram பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இதோ அந்த பதிவு…

 

View this post on Instagram

 

A post shared by farina azad (@farina_azad_official)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *