பிக் பாஸ் பிரபலமான ஆரவ்வின் மகனை பார்த்திருக்கீங்களா?… உங்களுக்கு இவ்வளவு பெரிய மகனா?… வைரலாகும் புகைப்படம் இதோ…

பிக் பாஸ் முதல் சீசன் டைட்டில் வின்னர் ஆரவ்வின்  மகன் புகைப்படம் தற்பொழுது இணையத்தில் வெளியாகியுள்ளது.

விஜய் தொலைக்காட்சியில் கடந்த ஐந்து ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வரும் மிகப் பிரபலமான ரியாலிட்டி ஷோ பிக் பாஸ். தற்போது பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி நடந்து கொண்டு வருகிறது. இந்த நிகழ்ச்சியில் முதல் சீசனின் டைட்டில் வின்னரானவர் தான் நடிகர் ஆரவ். இந்த நிகழ்ச்சியில் பங்கு பெற்ற பல்வேறு பிரபலங்கள் தற்போது சினிமாவில் நடிகர் மற்றும் நடிகைகளாக கலக்கி வருகின்றனர்.

இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கு பெறுவதற்கு முன்பாகவே ஓ காதல் கண்மணி, சைத்தான் போன்ற படங்களில் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். ஆரவ் பிக் பாஸ் வீட்டில் இருந்தபோது ஓவியா இவர் மீது தீராத காதல் கொண்டிருந்தார் என்பது நம் அனைவருக்கும் தெரிந்த விஷயமே. ஆனால் இவர் நடிகை ராகி என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

நடிகை ராகி கெளதம் இயக்கத்தில் உருவாகி வரும் உருவான ‘இமைப்போல் காக்க’ திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார். இவர்களது திருமணத்தில் பல பிரபலங்கள் கலந்து கொண்டனர். மேலும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சக போட்டியாளர்களும் கலந்து கொண்டு மணமக்களுக்கு வாழ்த்து கூறினர்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கிடைத்த பிரபலம் மூலமாக இவருக்கு திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இவர் ‘மார்க்கெட் ராஜா’ என்னும் திரைப்படத்தில் நடித்திருந்தார். ஆனால் இப்படம் எதிர்பார்த்த அளவு வெற்றி பெறவில்லை. இதனை தொடர்ந்து உதயநிதி நடிப்பில் வெளியான கலகத் தலைவன் திரைப்படத்தில் வில்லனாக நடித்தார்.

இந்நிலையில் பிக் பாஸ் பிரபலமான ஆரவ் தனது மகனின் பிறந்த நாளை முன்னிட்டு அவருக்கு வாழ்த்து கூறி புகைப்படத்தை பதிவு செய்துள்ளார். தற்பொழுது இந்த புகைப்படம் வைரலாகி வருகிறது. மேலும் ரசிகர்களும் தங்களது வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

இதோ அவரது மகனின் புகைப்படம்….

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *