அட.. இவர்தான் நடிகை ஸ்ரேயாவின் அம்மாவா?… எவ்ளோ இளமையா இருக்காங்க… அம்மாவா இல்ல சகோதரியா?…குழம்பிய ரசிகர்கள்….

நடிகை ஸ்ரேயா தனது அம்மாவுடன் இருக்கும் புகைப்படத்தை தற்போது இணையத்தில் பகிர்ந்துள்ளார்.

தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவர் நடிகை ஸ்ரேயா. இவர் தமிழில் ‘எனக்கு 20 உனக்கு 18’ என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். தமிழின்  முன்னணி நடிகர்களான விஜய், அஜித், சூர்யா  போன்றோருடன் நடித்து முன்னணி நடிகையாக குறுகிய காலகட்டத்திலேயே உயந்தார். இவர் நடிப்பில் வெளியான மழை, சிவாஜி போன்ற படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.

பல விருதுகளை வாங்கி குவித்துள்ளார் நடிகை ஷ்ரேயா. தனது 36 வயதில் ஸ்ரேயா 2018 ஆம் ஆண்டு ஆண்ட்ரே கோஸ்சீவ் என்பவரை திருமணம் செய்தார். இவருக்கு ‘ராதா’ என்ற பெண் குழந்தையும் உள்ளது. இன்ஸ்டாகிராமில் இவருக்கு  சுமார் 3.2 மில்லியன் போல்லோவெர்கள் உள்ளனர்.

இவர் நடிப்பில் இறுதியாக ராஜமவுலி இயக்கத்தில் ஆர் ஆர் ஆர் திரைப்படம் வெளிவந்து மாபெரும் வெற்றி அடைந்தது. இதைத் தொடர்ந்து தற்பொழுது சமூக வலைத்தளங்களில் நடிகை ஸ்ரேயா எப்பொழுதும் ஆக்டிவாக உள்ளார். இவர் அப்போது தனது லேட்டஸ்ட் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவு செய்து வருகிறார்.

அந்த வகையில் இவர் தனது அம்மா நீரஜாவுடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை பதிவு செய்துள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் ‘நடிகை ஸ்ரேயாவின் அம்மாவா இது? இன்னும் இவ்வளவு இளமையாக இருக்கிறாங்களே’ என்று கமெண்ட் செய்து வருகின்றனர். தற்போது இந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.

இதோ அந்த புகைப்படம்….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *