இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறப் போவது இவர்தானா?… அப்போ ராம் இல்லையா?… வைரலாகும் தகவல் இதோ…

பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் இருந்து இந்த வாரம் வெளியேறப் போகும் நபர் குறித்த தகவல்கள் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி ஆனது நாளுக்கு நாள் பரபரப்பாக சென்று கொண்டுள்ளது. இந்த பிக் பாஸ் வீட்டில் தற்பொழுது உள்ள 15 போட்டியாளர்களும் தங்களது நிஜ முகத்தை காட்டத் தொடங்கியுள்ளனர். ஒவ்வொருவரும் தங்களது விளையாட்டை சிறப்பாக விளையாடவும் தொடங்கிவிட்டனர்.

அந்த வகையில் இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் ஓபன் நாமினேஷன் நடைபெற்றுள்ளது. இதில் கதிரவன், தனலட்சுமி, ராபர்ட் மாஸ்டர், ராம், அமுதவாணன், அசீம் மற்றும் மணிகண்டன் போன்ற போட்டியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். ஓபன் நாமினேஷன் காரணமாக போட்டியாளர்களுக்கு இடையே சண்டைகளும் ஆரம்பித்துவிட்டது.

சென்ற வாரம் கதிரவன் முதலில் காப்பாற்றப்பட்டார். இந்த வாரம் யார்  காப்பாற்றப்படுவார்? என்ற கேள்வியும் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. ஆனால் தற்பொழுது குறைந்த வாக்குகள் பெற்று அமுதவாணன், ராபர்ட் மாஸ்டர், ராம் போன்றோர் டேன்ஜெர் ஜோனில் உள்ளனர் .

கடந்த வாரமே ராம் தான் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறுவார் என பலரும் எதிர்பார்த்த நிலையில் திடீரென ராம் சேவ் செய்யப்பட்டார். இந்நிலையில் இந்த வாரமும் ராம் தான் வெளியே போவார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில், ஆனால் வேறொரு தகவல் சமூக வலைத்தளங்களில் பரவி வைரலாகி வருகிறது.

அதாவது ரக்ஷிதா உடன் ரொமான்ஸ் செய்கிறேன் என்ற பெயரில் வழிந்து வரும் ராபர்ட் மாஸ்டர் ரசிகர்களை மிகவும் கோபப்படுத்தியுள்ளார் .எனவே இவரைத்தான் இந்த வாரம் பிக் பாஸ் வீட்டை விட்டு ரசிகர்கள் அனுப்ப உள்ளனர் என்ற தகவல் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

அந்த வகையில் ராபர்ட் மாஸ்டர் தான் குறைந்த வாக்குகள் பெற்று கடைசி இடத்தில் உள்ளார் என இணையத்தில் கூறப்படுகிறது. பொறுத்திருந்து பார்க்கலாம் ராபர்ட் மாஸ்டர் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறுவாரா என்று.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *