‘இசையரசி’ பாடகி பி சுசிலாவின் கணவர் மற்றும் மகனை பார்த்திருக்கீங்களா?… வைரலாகும் அழகான குடும்ப புகைப்படம் இதோ…

பிரபல பாடகியான பி சுசிலா அவர்களின் அழகான குடும்ப புகைப்படம் தற்போது இணையத்தில் வெளியாகி உள்ளது .

பிரபல பாடகியான பி சுசிலா அவர்கள் இந்திய திரைப்படத்துறையில் புகழ்பெற்ற பின்னணி பாடகியாவார் .தனது இனிமையான குரலால் தென்னிந்திய மக்களின் இதயங்களில் நிரந்தரமான இடத்தைப் பிடித்தவர். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், பெங்காலி, ஹிந்தி, சமஸ்கிருதம், சிங்களம் என பல இந்திய மொழிகளில் தி 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட திரைப்படப் பாடல்களை பாடியுள்ளார்.

இவர் பல விருதுகளை வென்று சாதனையும் படைத்துள்ளார். மத்திய அரசால் வழங்கப்படும் உயரிய விருதான ‘பத்மபூஷன்’ விருதுக்கும் சொந்தக்காரர். தன்னுடைய வசீகரக் குரலால் பல இசை நெஞ்சங்களை வருடி என்றென்றும் அழியா புகழ் பெற்று விளங்குகிறார் பி சுசீலா. இவர் முதன் முதலில் 1953 இல் வெளியான ‘பெற்ற தாய்’ திரைப்படத்தில் ‘எதுக்கு அழைத்தாய்’ என்ற பாடலை பாடினார்.

இதைத் தொடர்ந்து பல ஹிட் பாடல்களை பாடி அசத்தி உள்ளார். குறிப்பாக ஆலயமணியின் ஓசையை நான் கேட்டேன், நினைக்கத் தெரிந்த மனமே, சிட்டுக்குருவி முத்தம், முத்தான முத்தல்லவோ, மன்னவனே அழலாமா, பேசுவது கிளியா, ஆயிரம் நிலவே வா, வளர்ந்த கலை, அனுபவம் புதுமை, தாமரை கன்னங்கள், மறைந்து இருந்து பார்க்கும் என இவருடைய சூப்பர் ஹிட் பாடல்கள் எண்ணிக்கையில் அடங்காதது.

இவர்தன் அமுத குரலில் பாடிய ‘தமிழுக்கு அமுதென்று பேர்’ என்ற பாடல் தமிழ் பிரியர்களின் மனதை அமுத மழையால் நனைத்ததும் குறிப்பிடத்தக்கது .எத்தனை காலங்கள் ஆனாலும் பி சுசிலா அவர்களின் மயக்கும் குரலில் உதிர்ந்த நெஞ்சை  வருடும் அனைத்து பாடல்களையும் யாராலும் மறக்க முடியாது.

தற்பொழுது இவரின் அழகான குடும்ப புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி உள்ளது. இதில் அவர் தனது கணவர் மற்றும் குழந்தைகளுடன் காணப்படுகிறார். இந்த அரிய புகைப்படம் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

இதோ அந்த புகைப்படம்….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *