கிருஸ்துவ முறைப்படி பைபிள் ஓதி முயல்களுக்கு திருமணம்! மில்லியன் பேர் பார்த்து ரசித்த வைரல் வீடியோ

மனிதர்களுக்கு முறைப்படி திருமணம் நடத்தி வைப்பதுபோல் உறவினர்கள் புடைசூழ முயல்களுக்கு நடத்தி வைக்கப்பட்ட திருமணம் இணையதளத்தை கலக்கி வருகிறது.

அதில், திருமணத்துக்கு தயாராக அலங்கரிக்கப்பட்டு இரண்டு முயல்கள் உள்ளன. அதனுடன், அந்த முயலை வளர்த்தவர்களும் இருக்கின்றனர்.

கிறிஸ்துவ முறைப்படி, திருமணத்துக்கான ஒப்பந்தத்தை பாதிரியார் படித்தவுடன், அங்கிருந்தவர்கள் கைத்தட்டி ஆரவார குரல் எழுப்புகின்றனர்.

அதனைத்தொடர்ந்து இரண்டு முயல்களுக்கும் திருமணம் நடத்தி வைக்கப்படுகிறது. முயல் கணவர், முயல் மனைவி என அங்கிருந்தவர்கள் கூச்சல் எழுப்ப திருமண விழாவில் உற்சாகம் ஏற்படுகிறது.

இதில், ஏராளமானோர் கலந்து கொண்டு முயல் தம்பதிக்கு வாழ்த்துக்களையும் தெரிவிக்கின்றனர். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது.

 

Leave a Reply

Your email address will not be published.