நடிகை சினேகா விளம்பரத்தில் நடிக்க எவ்வளவு சம்பளம் தெரியுமா? ஒரு நாளைக்கு மட்டும் இத்தனை லட்சமா..!

தமிழ் சினிமாவின் புன்னகை அரசி நடிகை சினேகா. அன்று முதல் இன்று வரை தன் அழகான சிரிப்பினால் அனைவரின் மனதிலும் இடம் பிடித்தவர் நடிகை சினேகா. ஆனந்தம் படத்தின் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் நடிகையாக பிரபலமானவர் சினேகா. இவர் என்னவளே படம் மூலம் தமிழ் சினிமா திரையுலகில் அறிமுகமானார். நடிகர் பிரசன்னாவை திருமணம் செய்து கொண்டு ஃபுல் டைம் ஃபேமிலி பெண்ணாக சில காலம் இருந்து வந்தார். அவருக்கு விசாகன் என்ற ஆண் குழந்தையும் பிறந்தான்.

அவன் தற்போது வளர்ந்த பையனாகவிட்டான். அப்பா பிரசன்னாவுடன் எடுத்துக்கொண்ட போட்டோவில் அவனை சமூக வலைதளத்தில் காணலாம். இரண்டாம் குழந்தை கர்ப்பமாக இருந்த போதே சினேகா சினிமாவுக்கு மீண்டும் நடிக்க வந்தார். தனுஷுடன் பட்டாஸ் படத்தில் நடித்த சமயத்தில் அவர் கர்ப்பமாக தான் இருந்தார். பின் பெண் குழந்தையும் பிறந்தது. திருமணத்திற்கு பின்னரும் சினேகா திரைப்படங்களில் நடித்து வருகின்றார்.

திரைப்படங்களில் மட்டும் அல்லாது விளம்பரங்களிலும் தற்போது நடிக்கின்றார். ஒரு சில விளம்பரங்களில் சினேகா மற்றும் பிரசன்னா இருவரும் நடிக்கிறார்கள். இந்நிலையில் சினேகா விளம்பர படங்களில் வாங்கும் சம்பளம் குறித்த தகவல் இணையத்தில் கசிந்துள்ளது. விளம்பர படத்தில் நடிக்க மாத்திரம் ஒரு நாளைக்கு ரூ 2 லட்சம் சம்பளமாக பெறுகிறாராம். இதனை அறிந்த ரசிகர்கள் ஷாக்கில் வாயடைத்து போயுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published.