முன்னணி இயக்குனருடன் பிக்பாஸ் லாஸ்லியா.. இணையத்தில் வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படம்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டாலே பிரபலமாகி விடலாம் என்ற அளவிற்கு இந்த பிக்பாஸ் நிழ்ச்சி அடுத்த கட்டத்தை எட்டியது. பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரசிகர்களிடையே பெரிய அளவில் பிரபலமானவர் தான் லாஸ்லியா. இவர் இலங்கையில் செய்தி வாசிப்பாளராக இருந்தது அனைவர்க்கும் தெரிந்த விஷயமே. இந்நிகழ்ச்சியின் மூலம் லாஸ்லியாவுக்கு ஓர் பெரிய ரசிகர் பட்டாளமே கிடைத்தது.

தற்போது லாஸ்லியா கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் உடன் பிரண்ட்ஷிப் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார், இப்படத்தின் ட்ரைலர் வெளியாகவுள்ளது. அதனை தொடர்ந்து இவர் பிக்பாஸ் சீசன் 4 வின்னரான ஆரியுடன் ஒரு திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். பிக்பாஸ் சீசன் 3 மூலம் ரசிகர்களிடையே பிரபலமானவர்கள் தான் லாஸ்லியா மற்றும் தர்ஷன், இவர்கள் இருவரும் தற்போது கூகுள் குட்டப்பன் என்ற படத்தில் நடித்து வருகின்றனர்.

இந்நிலையில் மற்றுமொரு பிக்பாஸ் நட்சத்திரமான தர்ஷன், கே.எஸ்.ரவிக்குமார், யோகி பாபு உள்ளிட்ட நட்சத்திரங்களுடன் லாஸ்லியா நடித்து வரும் திரைப்படம் தான் கூகுள் குட்டப்பன். இணையத்தில் எப்போதும் ஆக்ட்டிவ்வாக இருப்பவர் நடிகை லாஸ்லியா. மேலும் இப்படத்தில் இருந்து தற்போது புதிய புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது, அதில் அவருடன் இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமாரும் உள்ளார். இதோ அந்த புகைப்படம்..

Leave a Reply

Your email address will not be published.