பிரபல காமெடி நடிகரின் மகனை திருமணம் செய்யப் போகும் நடிகர் அர்ஜுனின் மகள்… யாருன்னு தெரிஞ்சா ஷாக் ஆயிடுவீங்க…

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் கலக்கி வரும் ஷர்ஜா குடும்பத்தை சேர்ந்தவர் நடிகர் அர்ஜுன். இவர் தமிழ் சினிமாவில் பல வெற்றி படங்களை கொடுத்து ‘ஆக்சன் கிங் அர்ஜுன்’ என்று ரசிகர்களால் அழைக்கப்படுகிறார். இவர் நிவேதிதா என்ற கன்னட நடிகையை திருமணம் செய்து கொண்டார்.

   

 

நடிகர் அர்ஜுனுக்கு ஐஸ்வர்யா, ரஞ்சன் என்று இரண்டு மகள்கள் உள்ளனர். இவரின் மூத்த மகளான ஐஸ்வர்யா நடிப்பு மற்றும் மாடலிங் துறையின் மீது ஆர்வம் கொண்டவர். இவர் விஷால் நடித்த ‘பட்டத்து யானை’ திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக தமிழ் திரை உலகில் அறிமுகமானார். இதை தொடர்ந்து அவர் ‘சொல்லி விடவா’ என்ற படத்திலும் நடித்தார்.

பட வாய்ப்புகள் இன்றி தற்பொழுது உள்ளார். சினிமாவில் மார்க்கேட் இல்லாததால் குடும்பத்தொழிலை கவனித்து வரும் ஐஸ்வர்யா ரசிகர்கள் மத்தியில் தனது பிரபலம் குறையாமல் இருக்க சமூக வலைத்தளங்களில் தனது புகைப்படங்களை அடிக்கடி பகிர்ந்து வருகிறார்.

இந்நிலையில் தம்பி ராமையா மகன் உமாபதி மற்றும் ஐஸ்வர்யா நீண்ட நாட்களாக காதலித்து வருவதாகவும், இவர்கள் இருவரும் இரு வீட்டார் சம்மதத்துடன் விரைவில் திருமணம் செய்து கொள்ளப்போவதாகவும் இணையத்தில்  தகவல்கள் வெளியாகி வைரலாகி வருகிறது.