மேடையில் ஆங்கிலத்தில் பேசிய மகன்… தமிழ்ல பேசுப்பானு சொன்ன ஏ.ஆர். ரஹ்மான்.. வைரல் வீடியோ இதோ..!!

ஏ.ஆர்.ரகுமான்

தமிழ் சினிமாவில் புகழ் பெற்ற இசையமைப்பாளர்களில் ஒருவரான ஏ.ஆர்.ரகுமான் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என பல்வேறு மொழி படங்களில் இசையமைத்து உலகம் அறியும் இசையமைப்பாளராக இருக்கிறார்.

இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் கதை - மினி கட்டுரை!

   

இசைப்புயல் என அழைக்கப்படும் இவர் தற்போது தமிழில் தனுஷின் ராயன், கமல்ஹாசன்-மணிரத்னம் படம், ரஜினி மகள் ஐஸ்வர்யாவின் லால் சலாம், சிவகார்த்திகேயனின் அயலான், ஜெயம் ரவி நடிக்கும் ஜீனி என அரை டஜன் படங்களை கைவசம் வைத்துள்ளார். இவருக்கு 2010-ஆம் ஆண்டில் இந்திய அரசின் பத்ம பூசண் விருது அளிக்கப்பட்டது. மேலும் இவர் ஆசியாவின் மொசார்ட் என்றும் அழைக்கப்படுகிறார். இவரது மனைவி பெயர் ஷெரினா பானு. இவருக்கு காதிஜா, கீமா ரகுமானியா, அமின் என மூன்று பிள்ளைகள் உள்ளனர்.

AR Rahman's Daughter Khatija Marries Audio Engineer!

மகனை கலாய்த்த ரகுமான்

கடந்த ஆகஸ்ட் 20ம் தேதி கோவையில் மறக்குமா நெஞ்சம் இசை நிகழ்ச்சி நடைபெற்ற போது, ஆயிரக்கணக்கான ரசிகர்கள் அதில் பங்கேற்றனர்.

இந்த நிகழ்ச்சியின் போது மேடைக்கு வந்த தன்னுடைய மகனிடம், “பயமா இருக்கா, இல்ல உற்சாகமா இருக்கா, பொண்ணுங்கலாம் பார்த்துட்டு இருக்காங்க” என ரகுமான்  கேட்டுள்ளார். அப்போது அவர் மகன் அமீன் ஆங்கிலத்தில் பேசியுள்ளார். உடனே ஏ.ஆர்.ரகுமான் தமிழ்ல பேசுப்பா என கூற, அங்கிருந்த ரசிகர்கள் கத்தி ஆரவாரம் செய்த வீடியோ தற்போது சோசியல் மீடியாக்களில் வைரலாகி வருகிறது.