நடிகை சயீஷாவின் மகளா இது?… அச்சு அசலா அம்மாவை போலவே இருக்கிறாரே… வைரலாகும் க்யூட் புகைப்படம் இதோ

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் ஆர்யா. இவர் நடிப்பில் வெளிவந்த பல படங்கள் சூப்பர் சூப்பர் ஹிட் ஆகியுள்ளது. இவர் கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பான ‘எங்க வீட்டு மாப்பிள்ளை’ நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் மிகப் பிரபலமானார். இதைத்தொடர்ந்து இவர் 2019ல் நடிகை சயீஷாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

   

‘கஜினிகாந்த்’ திரைப்படத்தில் இணைந்து நடித்த போது இருவருக்கும் காதல் மலர்ந்ததாக கூறப்பட்டது. இதைத் தொடர்ந்து இருவரும் காப்பான், டெடி திரைப்படங்களில் இணைந்து நடித்திருந்தனர். நடிகை சயீஷா திருமணத்திற்கு பிறகு திரை உலகை விட்டு விலகி இருந்தார்.

இவர் 2021ல் ஒரு அழகான பெண் குழந்தையை பெற்றெடுத்தார். அந்த குழந்தைக்கு ‘அரியானா’ என்று பெயர் சூட்டினார். சமீபத்தில் தனது மகளின் புகைப்படத்தை இணையத்தில் பதிவு செய்தார் நடிகர் ஆர்யா. முதன்முதலாக பதிவு செய்த இந்த புகைப்படம் இணையத்தில் படுவைரலாக்கப்பட்டது.

தற்பொழுது நடிகை சயீஷா தனது மகள் அரியானாவுடன் எடுத்துக் கொண்ட அழகான புகைப்படம் ஒன்றை இணையத்தில் வெளியாகி உள்ளது. இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ‘அச்சு அசலா அம்மாவை போலவே இருக்கிறாரே’ என்று கமெண்ட் செய்து வருகின்றனர். வைரலாகும் அந்த க்யூட் புகைப்படம் இதோ….