அடடேய்  அங்கேயுமா உங்க வேலைய காடுரிங்க …  விமானத்தில் நடிகையிடம் சில்மிஷம், பாலியல் தொல்லை …. போலீசாரிடம் புகார் கொடுத்த இளம் நடிகை..!

மலையாளத்தில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவர்தான் நடிகை திவ்ய பிரபா. இவர் தமிழில் வெளியான ‘கயல்’ என்ற திரைப்படத்தின் மூலமாக தமிழ் திரையுலகில் அறிமுகமானார். அதைத் தொடர்ந்து இசையமைப்பாளர் மற்றும் நடிகரான விஜய் ஆண்டனி  நடிப்பில் வெளியான ‘ஆயிரத்தில் ஒருவன்’ என்ற படத்தில் நடித்து  மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு பெற்றுள்ளார்.

   

இவர் சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருக்கக்கூடியவர் அடிக்கடி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளார். தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விமானத்தில் பயணம் செய்யும்போது தனக்கு ஏற்பட்ட கசப்பான நிகழ்வுகளை பகிர்ந்துள்ளார்.

இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், சமீபத்தில் மும்பையில் இருந்து கொச்சிக்கு விமானத்தில் சென்றேன். விமானத்தில் இருந்த சக பயணி ஒருவர் குடிபோதையில் எனக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்தார்.

இதுதொடர்பாக அங்குள்ள விமான பணிப்பெண்களிடம் புகார் செய்தபோது அவர்கள் கண்டு கொள்ளவில்லை. ஆனாலும் நான் தொடர்ந்து புகார் செய்து கொண்டே இருந்ததால், எனது இருக்கையை மட்டும் மாற்றிவிட்டு சென்றனர்.கொச்சி வந்ததும் விமான நிலைய அதிகாரிகளிடம் இது தொடர்பாக புகார் அளித்தேன். கேரள போலீசாருக்கும் ஆன்-லைன் மூலமாக புகார் அளித்துள்ளேன்.

இந்த விஷயத்தில் பயணிகளின் பாதுகாப்புக்கு உரிய முக்கியத்துவம் அளிக்க வேண்டும். உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். சம்பந்தப்பட்ட குற்றவாளிக்கு தண்டனை வழங்கப்பட வேண்டும்.இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட விமான நிறுவன ஊழியர்கள் நடந்து கொண்ட விதம் எனக்கு அதிர்ச்சியை அளித்தத  என்று அந்த போஸ்டில் வெளிட்டிருந்தார்.

 

View this post on Instagram

 

A post shared by Divyaprabha (@divya_prabha__)