22 ஆண்டுகளுக்கு பிறகு நடந்த.. அழகி படத்தின் வெற்றிக்கூட்டம்.. அதுல வரும் குழந்தைளை பாருங்க.. எப்டி ஆள் அடையாளமே தெரியாம மாறிட்டாங்கனு..!

பள்ளி பருவ காதலை மறக்க முடியாமல் வாழும் பலரின் நினைவுகளை தோண்டி எடுத்து கண்கலங்க வைத்த திரைப்படம் தான் அழகி. இன்று எத்தனையோ திரைப்படங்கள் பள்ளி பருவக்காதலை கூறினாலும், நேருக்கு நேராக ஒரு வார்த்தைகூட பேசிக்கொள்ளாமல் பார்வையிலேயே வளரும் காதலை அழகாக காண்பித்திருக்கும் அழகி திரைப்படத்தை யாராலும் மறந்து விட முடியாது.

   

சந்தர்ப்ப சூழ்நிலையால் இவரும் பிரிந்து வெவ்வேறு பாதைகளில் தங்கள் வாழ்க்கையை தொடங்க, சோகமான சந்தர்ப்பத்தில் இருவரும் சந்தித்துக்கொள்கிறார்கள். அதன்பின்பு, என்ன  நிகந்தது என்பதை மிகவும் எதார்த்தமான வலிகளோடு காண்பித்திருப்பார் இயக்குனர் தங்கர்பச்சான்.

கடந்த 2002 ஆம் வருடத்தில் வெளிவந்த அந்த திரைப்படத்தில் நடிகர் பார்த்திபன், நந்திதா தாஸ், விவேக், தேவயானி உட்பட பலர் திரைப்படத்தில் நடித்திருந்தனர். அத்திரைப்படத்தின் பிளாஸ் பேக் காட்சிகளில் சிறுவயது பார்த்திபனாக வரும் நடிகர் மற்றும் அவரின் நண்பர்கள் என்று பலரும் தற்போது வெற்றிக்கூட்டம் ஒன்றில் பங்கேற்று இருக்கிறார்கள்.

அழகி திரைப்படம் வெளியாகி சுமார் 22 ஆண்டுகள் கடந்து விட்டது. எனினும், அத்திரைப்படத்திற்கான மவுசு தற்போது வரை குறையவில்லை. பாடல்கள், நகைச்சுவை காட்சிகள், காதல் காட்சிகள் என்று இன்று வரை நம் மனங்களை விட்டு நீங்காமல் இருக்கிறது அழகி திரைப்படம்.

இந்நிலையில், அத்திரைப்படத்தின் வெற்றிக்கூட்டமானது தற்போது நடந்திருக்கிறது. அதில் அத்திரைப்படத்தில் நடித்திருந்த குழந்தை நட்சத்திரங்கள் பங்கேற்றுள்ளனர். அந்த குழந்தை நட்சத்திரங்கள் தற்போது பெரியவர்களாக இருக்கும் புகைப்படங்கள் வெளியாகி உள்ளது.