நம்ம பாக்கியலட்சுமியா இது.? தாவணியில் அள்ளுது அழகு.. யாரும் பார்க்காத பருவ வயது புகைப்படம்..!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி தொடர் ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பு பெற்று இருக்கிறது. குடும்ப தலைவி வாழ்வில் படும் சிரமங்களை வைத்து எடுக்கப்பட்டிருக்கும் இந்த தொடர் இல்லத்தரசிகள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது.

   

பாக்கியலட்சுமியாக நடித்திருக்கும் நடிகை சுசித்ரா, இத்தொடர் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமாகி விட்டார். அவரின் கதாபாத்திரத்திற்கு தனி மதிப்பு இருக்கிறது. அதாவது, தன் கணவன் மற்றும் குடும்பத்தினர் மட்டுமே உலகம் என்று அவர்களுக்காகவே வாழ்ந்து கொண்டிருக்கும் அப்பாவி பெண், கணவனுக்கு இன்னொரு பெண்ணுடன் தொடர்பு இருப்பது தெரிந்தவுடன் என்ன செய்கிறார்? என்பது தான் கதை.

அதனைத்தொடர்ந்து, கணவனிடமிருந்து விவாகரத்து பெற்றுவிட்டு, தனியாக வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்று நினைக்கும் அவருக்கு ஏற்படும் சவால்களை ஒவ்வொரு நாளும் விறுவிறுப்பாக காண்பித்து வருகிறார்கள்.

இந்நிலையில், சுமார் 13 வருடங்களுக்கு முன்பு எடுக்கப்பட்ட பாக்கியலட்சுமி சுசித்ராவின் புகைப்படம், தற்போது இணையதளத்தில் வெளியாகியிருக்கிறது. அதனைப் பார்த்த ரசிகர்கள், நம்ம பாக்கியலட்சுமி இது? தாவணியில் இவ்வளவு வித்தியாசமாக இருக்கிறார் என்று ஆச்சர்யப்பட்டு வருகிறார்கள்.