ஈஸ்வரி அம்மாவின் வீட்டு Function…. ஹைதராபாத் சென்ற பாக்கியலட்சுமி சீரியல் குழு… வெளியான அழகிய புகைப்படங்கள்..

விஜய் டிவியில் மிகவும் பிரபலமான சீரியல்களில் ஒன்று தான் பாக்கியலட்சுமி. இந்த சீரியல் ஒரு குடும்பத் தலைவியின் கதையை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டு வருவதால் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது.

   

குறிப்பாக பாக்கியலட்சுமி சீரியலில் பாக்கியாவாக நடித்து வரும் சுஜித்ரா கதாபாத்திரம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

ஒட்டுமொத்த பெண் ரசிகைகளை கட்டிப்போட்டு வைத்திருக்கும் பாக்யா அடிக்கடி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ மற்றும் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

ஒரு சாதாரண குடும்பத்தில் குடும்பத் தலைவிகள் படும் கஷ்டங்கள் அதனை சமாளித்து அவர்கள் முன்னேறும் விதம் இவற்றை கதையாக அமைத்துள்ளனர்.

கணவர் தன்னை விவாகரத்து செய்தாலும் சோர்ந்து போகாத பாக்யா தனி ஆளாக நின்று தன்னுடைய குடும்பத்தை கவனித்து வருவது மட்டுமல்லாமல் சுயமாகவும் தொழில் செய்து வருகிறார்.

இப்படி தினம் தோறும் புதுவிதமான கதை காலத்துடன் சீரியல் ஒளிபரப்பாகி கொண்டிருக்கிறது.

இந்நிலையில் பாக்கியலட்சுமி சீரியல் குழுவினர் அனைவரும் தற்போது ஹைதராபாத் சென்று உள்ளனர்.

அதாவது சீரியலில் நடித்து வரும் கம்பம் மீனா, நேகா மேனன், VJ விஷால், திவ்யா கணேஷ்,ரேஷ்மா, எஸ் டி பி ரோசாரி உள்ளிட்ட பலரும் தற்போது ஹைதராபாத் சென்றுள்ளனர்.

அதாவது சீரியலில் ஈஸ்வரி கதாபாத்திரத்தில் நடித்து வரும் ராஜலட்சுமி அம்மாவின் மகன் திருமணம் ஹைதராபாத்தில் நடைபெறுகிறது.

அவரின் திருமண நிச்சயதார்த்தம் நேற்று நடந்து முடிந்த நிலையில் பாக்கியலட்சுமி சீரியல் குழுவினர் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

அது தொடர்பான புகைப்படங்களை கம்பம் மீனா இணையத்தில் பகிர்ந்து உள்ளார்.

அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகின்றது.