திருமணம் குறித்து மனம் திறந்து பேசிய… நிச்சயதார்த்தம் நின்று போன ‘பாக்கியலட்சுமி’ சீரியல் நடிகை திவ்யா…  இப்படி சொல்லிட்டாங்களே… நீங்களே பாருங்க…

விஜய் தொலைக்காட்சியின் சூப்பர் ஹிட் சீரியல்களில் ஒன்று ‘பாக்கியலட்சுமி’. இந்த சீரியல் தற்போது பரபரப்பாக விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிக் கொண்டுள்ளது.

   

இந்த சீரியல் தற்போது விஜய் தொலைக்காட்சியின் டிஆர்பி யில் நம்பர் ஒன் இடத்தை பிடித்துள்ளது.

இந்த சீரியலில் தற்போது எப்போதும் குடும்பம், குடும்பம் என வாழ்ந்த பாக்கியா தற்பொழுது தனக்காக வாழத் தொடங்கியுள்ளார்.

தனது கணவர் ஏமாற்றியதை நினைத்து கவலைப்படாமல் அதில் இருந்து வெளியே வந்து தனது எதிர்காலத்திற்காக உழைத்து வருகிறார்.

இதைத் தொடர்ந்து அவருக்கு பெரிய கம்பெனியின் கேட்டரிங் ஆர்டரும், அதற்காக அவர் தற்பொழுது இங்கிலிஷ் கத்துக் கொள்ள கிளாஸ்சிற்கும் சென்று வருகிறார்.

மேலும் இத்தொடரில் புதிய என்ட்ரீயாக ரஞ்சித்  நுழைந்துள்ளார். இனி அவரது காட்சிகள் தான் அதிகம் இருக்கும் என கூறப்படுகிறது.

நடிகை திவ்யா கணேஷிற்கும், தயாரிப்பாளரும், நடிகருமான ஆர்.கே.சுரேஷுடன் நிச்சயதார்த்தம் நடந்தது.

ஆனால் சில காரணங்களால் அவர்களது திருமணம் நின்றது. அண்மையில் ஒரு பேட்டியில் திவ்யா திருமணம் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.

அவர் அளித்துள்ள அந்த பேட்டியில் கூறியுள்ளதாவது , ‘நாம் எதிர்ப்பார்க்கும் படி யாரும் இருக்க மாட்டார்கள். இப்போதெல்லாம் நிறைய பேர் திருமணம் செய்கிறார்கள்.

ஆனால் விட்டுச்சென்று விடுகின்றனர். கூட இருப்பதில்லை. அதுபோன்ற உறவு எதற்கு வருகிறது? எதற்கு போகிறது? என்பதே தெரியவில்லை’ என மனம் நொந்து கூறியுள்ளார்.

தற்பொழுது இவரின் இந்த போட்டியானது இணையத்தில் வைரலாகி வருகிறது.