ஆங்கிலத்தில் சரளமாக பேசி மாஸ் காட்டிய பாக்கியா… அவரா இது?… வைரலாகும் சூப்பர் ப்ரோமோ இதோ…

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் டி ஆர் பி யில் நம்பர் 1 இடத்தை பிடித்து, பரபரப்பாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாக்யலட்சுமி. இந்த சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது.  இந்த சீரியலில் தற்போது எப்போதும் குடும்பம், குடும்பம் என வாழ்ந்த பாக்கியா தற்பொழுது தனக்காக வாழத் தொடங்கியுள்ளார்.

   

தனது கணவர் ஏமாற்றியதை நினைத்து கவலைப்படாமல் அதில் இருந்து வெளியே வந்து தனது எதிர்காலத்திற்காக உழைத்து வருகிறார். இதைத் தொடர்ந்து அவருக்கு பெரிய கம்பெனியின் கேட்டரிங் ஆர்டரும், அதற்காக அவர் தற்பொழுது இங்கிலிஷ் கத்துக் கொள்ள கிளாஸ்சிற்கும் சென்று வருகிறார்.

மேலும் இத்தொடரில் புதிய என்ட்ரீயாக ரஞ்சித்  நுழைந்துள்ளார். இனி அவரது காட்சிகள் தான் அதிகம் இருக்கும் என கூறப்படுகிறது. இந்நிலையில் இன்றைய நாளின் ப்ரோமோ தற்பொழுது இணையத்தில் வெளியாகியுள்ளது. இதில் ஈஸ்வரி கேட்டரிங் சர்விசை துவங்குகிறார் பாக்கியா. இந்த விழாவிற்கு பாக்கியா மாமியார் வரும் பொழுது, ராதிகா ‘வாங்க அத்தை’ என வரவேற்கிறார்.

கடுப்பான ஈஸ்வரி ‘நான் ஒன்னும் உன்னை பார்ப்பதற்காக இங்கு வரவில்லை. என்னுடைய மருமகள் கேட்டரிங் திறப்பு விழாவிற்காக வந்துருகிறேன்’ என கூறுகிறார்.இதன்பின் ராதிகாவை சந்திக்கும் பாக்கியா ஆங்கிலத்தில் சரளமாக பேசி மாஸ் காட்டுகிறார்.

ஏற்கனவே கடந்த வாரம் ஒளிபரப்பான எபிசோடில் பாக்கியாவிற்கு சரியாக ஆங்கிலம் பேசவராத காரணத்தினால் அவரை அவமானப்படுத்தினார் ராதிகா.அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாக்கியா ஆங்கிலத்தில் பேசி அசத்தியுள்ளார். இந்த ப்ரோமோ விடியோவை பார்த்த ரசிகர்கள் ‘நம்ம பாக்கியாவா இது?’ என அசந்து போய் ப்ரோமோவை திரும்ப திரும்ப பார்த்து வருகின்றனர்.

இதோ அந்த மாஸ் ப்ரோமோ வீடியோ…