
விஜய் டிவியில் ஒளிபரப்பான நடன நிகழ்ச்சி ஒன்றில் போட்டியாளராக அறிமுகமானவர் ஆலியா மானசா.
பின்பு அவருக்கு ‘ராஜா ராணி’ சீரியலில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இவர் ராஜா ராணி சீரியலில் சஞ்சீவ் என்பவருடன் இணைந்து நடித்தார். சீரியல் ஜோடியாக நடித்த இருவரும் நிஜத்திலும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.
ராஜா ராணி சீரியலின் முதல் பாகம் வெற்றியடைந்ததை தொடர்ந்து ராஜா ராணி 2 சீரியலும் ஆலியா மானசா நடித்து வந்தார். சஞ்சீவ் சன் டிவியின் கயல் சீரியலில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இவரைத் தொடர்ந்து ஆலியா மானசாவும் சன் டிவியில் ‘இனியா’ சீரியலில் நாயகியாக நடித்து வருகிறார். தற்போது இவர் எங்கள் படப்பிடிப்பு தளத்தில் திடீரென புதிய விருந்தினர் வந்திருக்கிறார்’என்ற கேப்ஷனுடன் பாம்பு படம் எடுத்து ஆடும் வீடியோவை வெளியிட்டுள்ளார்.
அதாவது ஆலியா ஒரு சீரியலில் நடித்துக் கொண்டிருந்த போது திடீரென ஒரு நல்ல பாம்பு படப்பிடிப்பு நடந்த வீட்டுக்குள் வந்ததாகவும், அதை கண்டு அதிர்ச்சி அடைந்து பட குழுவினர் வீட்டை விட்டு வெளியேறி விட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். வீடியோ இதோ,