தங்கச்சி கணவரோடு சேர விரும்பிய ஐஸ்வர்யா.. மகள்களின் குடும்பி பிடி சண்டையை தீர்த்து வைத்த ரஜினிகாந்த்..!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகளான ஐஸ்வர்யா 3 என்ற திரைப்படத்தை இயக்கி தமிழ் திரை உலகில் இயக்குனராக அறிமுகமானார். தனுஷ்-ஸ்ருதிஹாசன் நடிப்பில் வெளியான அத்திரைப்படம் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை. எனினும், பள்ளி பருவ காதல் மற்றும் காதல் தோல்வி பாடல் இளைஞர்களை வெகுவாக ஈர்த்துவிட்டது.

   

அதன் பிறகு, சிறிது காலம் இடைவெளி எடுத்துக்கொண்ட ஐஸ்வர்யா சமீபத்தில் லால் சலாம் என்ற திரைப்படத்தை இயக்கியிருக்கிறார். இந்நிலையில் பிரபலங்களின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து சர்ச்சையான கருத்துக்களை அவ்வபோது கூறும் பயில்வான் ரங்கநாதன் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் குறித்து கூறியிருக்கிறார்.

அவர் தெரிவித்திருப்பதாவது, சௌந்தர்யா ரஜினிகாந்தின் இரண்டாவது கணவருக்கு திரைப்படத்தில் நடிக்க வேண்டும் என்ற ஆசை இருந்திருக்கிறது. அந்த சமயத்தில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தன் தங்கை கணவரை வைத்து ஒரு திரைப்படம் எடுக்க நினைத்திருக்கிறார். சௌந்தர்யாவிற்கு இதில் விருப்பமில்லை.

என் கணவர், அவரின் தொழிலை பார்த்துக் கொள்ளட்டும். நடிப்பதற்கு சென்றால் என் கட்டுப்பாட்டில் இருக்க மாட்டார் என்று தெரிவித்துள்ளார். இதனால் சகோதரிகள் இருவருக்குள்ளும் சண்டை உண்டானது. அதன் பிறகு, ரஜினிகாந்த குடும்பத்தில் ஒருவர் நடித்தால் போதும் என்று கூறி சண்டையை நிறுத்தி வைத்ததாக பயில்வான் ரங்கநாதன்  கூறியுள்ளார்.