‘சில்க் ஸ்மிதாவை நடிகை ஆக்கியதே நான் தான்’… பரபரப்பு பேட்டியளித்த முக்கிய பிரபலம்…

80கள், 90களில் சினிமாக்களில் நகைச்சுவை, குணச்சித்திர வேடங்கள், வில்லன் கதாப்பாத்திரங்களில் நடித்த பல துணை நடிகர்கள் இன்று காணாமல்போய்விட்டனர். ஆனால், இந்த தலைமுறையினர் மத்தியிலும் பிரபலமான முகமாக அறியப்படுபவர் பயில்வான் ரங்கநாதன். அதற்கு முக்கிய காரணம் அவர் யூடியூபில் பேசும் தகவல்கள்.

   

தலைமுறைகள் கடந்தாலும் சினிமாக்கள் மற்றும் திரைக்கலைஞர்கள் குறித்த கிசுகிசுக்களுக்கு இருக்கும் மவுசு குறையாததை புரிந்துகொண்ட பயில்வான் ரங்கநாதன் பல்வேறு யூடியூப் சேனல்களிலும், தொலைக்காட்சிகளிலும் நடிகர் நடிகைகளின் அந்தரங்க தகவல்கள் குறித்தும் பேசி வருகிறார். இதற்காகவே அவர் கடும் விமர்சனங்களையும் எதிர்கொண்டு வருகிறார்.

அந்தவகையில் நடிகை ராதிகா சரத்குமார் குறித்தும் பயில்வான் ரங்கநாதன் ஒரு யூடியூப் சேனலில் சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்தது பரபரப்பை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து ‘இரவின் நிழல்’ படத்தில் நடித்த நடிகை ரேகா நாயர் குறித்து பேசியதற்காக, பயில்வான் ரங்கநாதனிடம் அவர் வாக்குவாதத்தில் ஈடுபட்ட காட்சிகளும் வெளியாகின.

இதேபோல் பாடகி சுசித்ராவும் பயில்வான் ரங்கநாதனை தொலைபேசியில் தொடர்புகொண்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது. அதேபோல இவர் தற்பொழுது ஷகீலா அவர்களுடன் அளித்த பேட்டி ஒன்றில் சில்க் ஸ்மிதாவை நடிகை ஆக்கியதே நான் தான் என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார். இதோ அந்த வைரல் வீடியோ…

 

View this post on Instagram

 

A post shared by Galatta Media (@galattadotcom)