டப்பிங் பேசும்போதெல்லாம் அது வேணுமாம் அவருக்கு… பாண்டியராஜனின் குசும்பு… விளக்கம் கேட்ட பயில்வான் ரங்கநாதன்…!

நடிகர் பாண்டியராஜன் கடந்த 1985 ஆம் வருடத்தில் வெளிவந்த ஆண்பாவம் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் கதாநாயகனாக அறிமுகமானார். அதை தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்து தனக்கென தனி இடத்தை பிடித்தார். கதாநாயகனாக நடித்திருந்தாலும் நகைச்சுவை கலந்த அவரின் நடிப்பு ரசிகர்கள் மத்தியில் பெயர் பெற்றது.

   

குணசித்ர கதாபாத்திரங்களிலும், நகைச்சுவை வேடங்களிலும் பல திரைப்படத்தில் நடித்திருக்கிறார். இந்நிலையில், படப்பிடிப்பு தளத்தில் இவருக்காக எப்போதும் வெள்ளி தட்டு மற்றும் வெள்ளி டம்ளர் வந்துவிடுமாம். அதில் தான் அவர் சாப்பிடுவாராம்.

அதற்கு விளக்கம் கேட்டபோது, நான் ரொம்ப கஷ்டப்பட்ட குடும்பத்தை சேர்ந்தவன். அப்போது, சிறுவயதில் வெள்ளி தட்டில் சாப்பிட ஆசைப்பட்டேன். அதனால் தான் இப்போது சாப்பிடுகிறேன் என்று கூறியதாக பயில்வான் ரங்கநாதன் பேட்டி ஒன்றில் தெரிவித்திருக்கிறார்.

மேலும் அவர் கூறியிருப்பதாவது, நடிகர் பாண்டியராஜன் டப்பிங் பேசும் போது எப்போதும் அரை கிலோ அல்வா அவருக்காக கொண்டு செல்வார்களாம். எதற்காக சார் அல்வா? என்று கேட்டால், டப்பிங் பேசும் போது குரல் கரகரப்பாக இருக்கும்.

அல்வா சாப்பிட்டுக் கொண்டால் தொண்டையில் கரைந்து மென்மையாக இருக்கும் என்று கூறுவாராம். அவரை பார்த்து, பல நடிகர் நடிகைகள் டப்பிங் பேசும்போது அல்வா சாப்பிட தொடங்கி விட்டார்களாம்.