ஷாலினியை காதலிப்பதற்கு முன்பு… நடிகர் அஜித் பிரபல நடிகை ஒருவரை காதலித்தாரா?… யார் அந்த நடிகை தெரியுமா?…

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் அஜித். இவர் நடிப்பில் இறுதியாக வெளிவந்த ‘துணிவு’ திரைப்படம் ஆக்சன் திரில்லர் திரைப்படமாக அமைந்து ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றது. இதை தொடர்ந்து தற்பொழுது இவர் இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கத்தில் ‘விடாமுயற்சி’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இத்திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை த்ரிஷா நடிக்க இருப்பதாகவும் கூறப்பட்டு வருகிறது.

   

நடிகர் அஜித் சமீபத்தில் ‘ஏகே மோட்டோ ரைட்’ என்ற ஒரு நிறுவனம் ஒன்றை தொடங்கிய செய்தி இணையத்தில் வெளியாகி வைரலானது . நடிகர் அஜித் நடிகை ஷாலினியை  2000ல் காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு தற்பொழுது ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். திரைப்படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டு வரும் நடிகர் அஜித் அவ்வப்பொழுது பைக் ரைடும் சென்று வருகிறார்.

நடிகர் அஜித்துக்கு பைக் ரேட் செல்வது மிகவும் பிடிக்கும் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒரு விஷயமே .இந்நிலையில் நடிகர் அஜித் பற்றிய சுவாரசியமான தகவல் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. அதாவது நடிகர் அஜித் ஷாலினி யை காதலிப்பதற்கு முன்பு பிரபல நடிகை மீது அவருக்கு காதல் வந்ததாக கூறப்படுகிறது.

‘வான்மதி’ படத்தில் கதாநாயகியாக நடித்தவர் சுவாதி. நடிகர் அஜித் சுவாதியை திருமணம் செய்து கொள்ள நினைத்து வீட்டிற்கு பெண் கேட்டு சென்றதாகவும், அப்பொழுது சுவாதியின் அம்மா திருமணத்திற்கு ஒப்புக்கொள்ளாமல், நடிகர் அஜித்தை திட்டி அனுப்பியதாகவும் விமர்சகர் பயில்வான் சமீபத்தில் பேட்டி ஒன்றில் கூறியிருந்தார். தற்பொழுது இத்தகவல் ரசிகர்கள் மத்தியில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.