முதலாம் ஆண்டு திருமண நாளை கொண்டாடும் பாக்கியலட்சுமி சீரியல் நடிகை… வைரலாகும் புகைப்படம்…

இன்றைய காலகட்டத்தில் சின்னத்திரைகளில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கு என்று மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு உள்ளது. அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சூப்பர் ஹிட் சீரியல்களில் ஒன்று ‘பாக்கியலட்சுமி’ இந்த சீரியலானது பெண்களால் நினைத்தால் எதையும் சாதிக்க முடியும் என்பதை கதைக்களமாக அமைந்துள்ளது.

   

இந்த சீரியலை இயக்குனர் எஸ்.வி.ரத்ன குமார் அவர்கள்  இயக்கி வருகிறார். இந்த சீரியலில் கே எஸ் சுசித்ரா செட்டி,  ரேஷ்மா,  ரஞ்சி, த் ராஜலட்சுமி,  விகாஸ் சம்பத் , விஜே விஷால்,  ரித்திகா தமிழ்செல்வி,  போன்ற பல பிரபலங்கள் இந்த சீரியலில் நடித்துள்ளனர்.

இந்த சீரியலில்  அமிர்தா என்ற கதாபாத்திரத்தில் நடித்த மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றவர் நடிகை ரித்திகா தமிழ்செல்வி. திருமணத்திற்கு பிறகு சில எபிசோட் நடித்துவிட்டு வெளியேறிவிட்டார். அவருக்கு பதில் இப்போது அக்ஷிதா என்ற நடிகை நடித்து வருகிறார்.

இவர் கோயம்புத்தூரை பூர்வீகமாகக் கொண்டவர்.  இவர் கோயம்புத்தூரில் உள்ள மணி மேல்நிலை பள்ளியில் பள்ளி படிப்பை முடித்தார்.அதன் பிறகு இவர் எம்எஸ்சி சாஃப்ட்வேர் சிஸ்டம் என்ற பட்ட  படிப்பை முடித்தார்.  இவர் டிக் டாக் ஆப் பின் மூலமாக மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு பெற்றார். அதன் மூலமாக விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘ராஜா ராணி’ என்ற சீரியலில் சீரியல் மூலமாக சின்னத்திரையில் அறிமுகமானார்.

இந்த சீரியலில் வினோதினி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.  விஜய் டிவியில் சூப்பர் ஹிட் ஆக ஒளிபரப்பாக ‘குக் வித் கோமாளி’  நிகழ்ச்சில்   போட்டியாளராக கலந்து கொண்டர்.அதை தொடர்ந்து இவர் சாக்லேட்,  திருமகள் போன்ற சீரியல்களிலும்  நடித்துள்ளார். இவர் 4ஜி என்ற ஒரு குறுபடத்திலும்  நடித்துள்ளார். ஸ்டார்ட் மியூசிக் சீசன் 2, காமெடி ராஜா கலக்கல் ராணி, போன்ற நிகழ்ச்சிகளில் கலந்தது கொண்டார். தற்போது ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் அண்ணா என்ற தொடரில் நடித்து வருகிறார்.

நடிகை ரித்திகா தமிழ் செல்வி  வினு என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர் சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருப்பவர். தனது இன்ஸ்டா பக்கத்தில் கணவருடன் முதல் திருமண நாளை கொண்டாடிய புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.   தற்போது புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.