
பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்களில் ஒருவரான அசீம் தனது சொந்த தம்பியுடன் எடுத்துக் கொண்ட புகைப்படம் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது.
பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி ஆனது தற்போது விஜய் டிவியில் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி கொண்டுள்ளது. 90 நாட்களைக் கடந்த இந்த நிகழ்ச்சி தற்பொழுது முடிவு கட்டத்தை எட்டியுள்ளது. போட்டிகள் கடுமையாக்கப்பட்டு, போட்டியாளர்களும் டைட்டிலை வெல்ல கடுமையாக போராடி வருகின்றனர்.
தற்பொழுது இந்த வாரம் பிக் பாஸ் வீட்டை விட்டு யார் வெளியேறுவார்? என்பதை அறிய ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றன.ர் சமூக வலைத்தளங்களில் குறைந்த வாக்குகள் பெற்று சிவின் தான் வெளியேறுவார் என்ற கருத்தும் பரவலாக பேசப்பட்டு வருகிறது. இந்நிகழ்ச்சியில் ஸ்ட்ராங்கான போட்டியாளராக பார்க்கப்படுபவர் நடிகர் அஜீம்.
இவர் கோப குணம் கொண்டவராக இருந்தாலும், நிஜத்தில் மிக நல்லவர். கோபம் இருக்கும் இடத்தில் தான் குணம் இருக்கும் என்று கூறுவதைப் போல இவர் மற்ற போட்டியாளர்களிடம் மிகவும் அன்பாகவும் ஒரு சில சமயங்களில் நடந்து கொள்வார். பிக் பாஸ் வீட்டில் நடிக்காமல் தனது ஒரிஜினல் முகத்தை காட்டி தனது விளையாட்டை சிறப்பாக விளையாடி வருகிறார்.
இவருக்கு சமூக வலைத்தளங்களில் பெருமளவு ரசிகர்கள் ஆதரவளித்து வருகின்றனர். தற்பொழுது சமூக வலைத்தளங்களில் பிக் பாஸ் அசீம் தனது சொந்த தம்பியுடன் எடுத்துக் கொண்ட புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. இதை பார்த்த ரசிகர்கள் ‘பிக் பாஸ் அசிமின் தம்பியா இவர்? அச்சு அசலா அவரை போலவே இருக்காரே’ என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.
இதோ அவரின் புகைப்படம்….