தனது காதலரை இணையத்தில் முதன்முறையாக அறிமுகப்படுத்திய பிக் பாஸ் ஆயிஷா… இவர்தான் காதலரா?… நீங்களே பாருங்க…

பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமான சீரியல் நடிகை ஆயிஷா தற்பொழுது தனது காதலரின் புகைப்படத்தை இணையத்தில் முதன்முதலாக பதிவு செய்துள்ளார்.

விஜய் தொலைக்காட்சியில் அக்டோபர் 9ம் தேதி தொடங்கப்பட்ட பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி ஆனது சமீபத்தில் சில நாட்களுக்கு முன்னர் நிறைவடைந்தது. இந்நிகழ்ச்சியில் மொத்தம் 21 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர் .இவர்களில் இறுதிப் போட்டியாளராக விக்ரமன், அசீம், ஷிவின் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

   

இவர்களில் யார் வெற்றியாளர் என அறிய ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த வேளையில் வெற்றியாளராக அசீம் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த பிக் பாஸ் சீசன் 6ல் கலந்து கொண்ட போட்டியாளர்களில் ஒருவர்தான் சீரியல் நடிகை ஆயிஷா. இவர் ஜீ தமிழில் ஒளிபரப்பான சத்யா என்ற சீரியல் மூலம் தமிழக மக்களின் மனதை கவர்ந்தவர்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக களமிறங்கிய இவர் 50 நாட்களுக்கும் மேல் பிக் பாஸ் வீட்டில் இருந்தார். இதைத் தொடர்ந்து குறைந்த வாக்குகள் பெற்று பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார் நடிகை ஆயிஷா. இவர் தற்பொழுது தனது காதலனை முதன்முதலாக புகைப்படத்துடன் இணையத்தில் அறிமுகம் செய்துள்ளார்.மேலும் அவர் இந்த புகைப்படத்தில் தனது காதலனின் முகத்தை காட்ட வில்லை. இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது .

வைரலாகும் அந்த புகைப்படம் இதோ…