கல்லூரி நிகழ்ச்சியில் பங்கு பெற்ற ‘பிக் பாஸ்’ போட்டியாளர் விக்ரமன்… வைரலாகும் புகைப்படம்…

விஜய் டிவியில் மிகவும் பிரபலமான ரியாலிட்டி ஷோக்கலில் ஒன்று ‘பிக் பாஸ்’. இந்நிகழ்ச்சிக்கு என தனி ரசிகர் பட்டாளமே உள்ளனர்.

   

‘பிக் பாஸ்’ சீசன் 1 முதல்  6 சீசன் வரை முடிந்துள்ளது.இந்த அனைத்து சீசன்களும் மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.

‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியை பிரபல நடிகர் கமலஹாசன் அவர்கள் தொகுத்து வழங்கி வருகிறார். ‘பிக் பாஸ் சீசன் 6’ போட்டியாளராக கலந்து கொண்டு மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றவர் விக்ரமன்.

இவரின் முழு பெயர் விக்ரம் ராதாகிருஷ்ணன். இவர் திருநெல்வேலியில் பிறந்தார். தேனி மாவட்டத்தில் வளர்ந்தார்.தமிழ் வழிக் கல்வியை விரும்பி பயின்றவர்.இவர் பெங்களூருவில் இருக்கும் School of Policy and Governanceஇல் பட்டம் பெற்றார்.

பள்ளிப் பருவத்திலிருந்தே அம்பேத்கர், பெரியார் ஆகியோரின் சிந்தனைகளால் மிகவும் ஈர்க்கப்பட்டவர்.

விக்ரமன் 2016ஆம் ஆண்டு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘நடந்தது என்ன? குற்றமும் பின்னணியும்’ நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.

அதை  தொடர்ந்து சன் டிவியில் ஒளிபரப்பான EMI – தவணை முறை வாழ்க்கை என்ற சீரியலில் மகேஷ் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

புதிய தலைமுறை தொலைக்காட்சியின் நிருபராகவும் (Correspondent) கலாட்டா மீடியாவில் பொலிடிகல் எடிட்டர் ஆகவும் விக்ரமன் பணியாற்றினார் .

2020 ஆம் ஆண்டு விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இணைந்து  செய்தி தொடர்பாளராக நியமிக்கப்பட்டார்.திருமாவளவனின் கொள்கைகளால் ஈர்கப்பட்ட விக்ரமன், அவரை தீவிரமாக பின்தொடர்ந்து வருகிறார்.

தற்போது விக்ரமான் அவர்கள் குந்தவை நாச்சியார் அரசு மகளிர் கல்லூரியில் நடைபெற்ற முத்தமிழ் விழாவில் “சட்டத்தின் முன் அனைவரும் சமம்” என்பதை பற்றி இந்நிகழ்ச்சியில் பேசியுள்ளார்.தற்போது அந்த புகைப்படமானது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.