
விஜய் டிவியில் சூப்பர் ஹிட் ஆக ஒளிபரப்பான பிக் பாஸ் இந்நிகழ்ச்சியானது சீசன் ஆறு வரை நடைபெற்று உள்ளது. தற்போது வரும் அக்டோபர் 1ஆம் தேதி பிக் பாஸ் சீசன் 7 தொடங்க இருக்கும் நிலையில் தினம் தோறும் புதிய தகவல் வெளிவந்து கொண்டே தான் இருக்கிறது.
ரவீனா, ஜோவிகா, தர்ஷா குப்தா, குமரன், இந்தரஜா, விஷ்ணு, சத்யா, அனன்யா, மூன்நிலா, பப்லு பிரித்விராஜ் உள்ளிட்டோர் தான் தற்போது வரை உறுதி செய்யப்பட்டுள்ள போட்டியாளர்கள் என கூறப்படுகிறது.இந்நிலையில், தற்போது புதிய போட்டியாளர்கள் இருவர் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, தலைவா படத்தில் விஜய்யுடன் இணைந்து நடித்த விஜய் வர்மா என்பவர் பிக் பாஸ் 7ல் கலந்துகொள்ள இருக்கிறாராம்.
இவர் ஒரு நடன கலைஞர் கூட கடந்த பிக் பாஸ் 5ல் கலந்துகொண்ட நடிகை தாமரை செல்வியின் கணவர் பார்த்தசாரதி பிக் பாஸ் 7ல் கலந்துகொள்ள பேச்சு வார்த்தை நடந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.இதில் வரும் அனைவரும் கண்டிப்பாக பிக் பாஸ் 7ல் கலந்துகொள்ள போகிறார்களா என்று தெரியவில்லை. இந்த வாரம் இறுதியில் தெரிந்துவிடும்.