பிறந்தநாள் கொண்டாட்டத்தில் அலறி அடித்து ஓடிய நடிகை டாப்ஸி.! வைரலாகும் வீடியோ.!

இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் 2011 ஆம் ஆண்டு வெளியான படம் ஆடுகளம் இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார்.  இப்படத்தில்  தனுஷ், கிஷோர்,  டாப்ஸி,  ஆடுகளம் நரேன்,  முருகதாஸ்,   சென்றாயன்,  அட்டகத்தி தினேஷ்,   போன்ற பல பிரபலங்கள் இப்படத்தில் நடித்துள்ளனர்.

   

இப்படத்தில் கதாநாயகியாக நடித்து மக்கள் மத்தியில் இருந்து வரவேற்பு பெற்றவர் நடிகை டாப்ஸி.  இதுவே இவரின் தமிழில் முதல் திரைப்படமாகும். இவர் டெல்லியை பூர்வீகமாக கொண்டவர். நடிகை டாப்ஸி அசோக் விஹாரில் உள்ள மாதா ஜெய் கவுர் பப்ளிக் பள்ளியில் பள்ளிப்படிப்பை முடித்தார்.

ஐவர் குரு தேக் பகதூர் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியில் கணினி அறிவியல் பொறியியல் படித்தார். படித்து முடித்த பிறகு தனியார் நிறுவனத்தில்  மென்பொருள் பொறியாளராக பணிபுரிந்தார். அதன் பிறகு மாடலாக தனது திரை பயணத்தை ஆரம்பித்தார். இவர் 2010ஆண்டு வெளியான ‘சும்மாண்டி நாதம்’ என்ற  தெலுங்கு திரைப்படத்தில் மூலமாக திரையுலகில் அறிமுகமானார்.

இவர் தமிழில் ஒரு சில படங்கள் நடித்து இருந்தாலும் மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு பெற்றார். இவர் முனி, வலை,  வந்தான் வென்றான், மோகுடு, தராவு  போன்ற பல படங்கள்  நடித்துள்ளார். இவர் தற்போது ஹிந்தி திரைப்படங்களில் நடித்து வருகிறார். இவர் சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருக்கக்கூடியவர். தற்போது இவர் birthday poppers  வெடித்து அலறி ஓடிய வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.