தனது மனைவி ஸ்ரீதேவியின் புகைப்படத்தை பகிர்ந்து… உருக்கமான பதிவை வெளியிட்ட போனி கபூர்… என்ன சொன்னாருன்னு தெரியுமா?….

தமிழ் சினிமாவில் மட்டுமல்ல ஒட்டுமொத்த இந்திய சினிமா ரசிகர்களின் மனதிலும் நீங்காத ஆழமான இடத்தை பிடித்தவர் நடிகை ஸ்ரீதேவி. இவர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி போன்ற மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வந்தார்.  1963ல்  தனது நான்காம் வயதில் ‘துணைவன்’ என்ற திரைப்படம் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார்.

   

இதை தொடர்ந்து அவர் பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார்.1976 இல் ரஜினிகாந்த் மற்றும் கமலஹாசன் உடன் ‘மூன்று முடிச்சு’ படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். ஃபிலிம் ஃபேர் உள்ளிட்ட பல விருதுகளை பெற்ற ஸ்ரீதேவி இந்திய அரசின் ‘பத்மஸ்ரீ விருதையும்’ பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் இந்தி திரைப்பட தயாரிப்பாளரான போனி கபூரை திருமணம் செய்து கொண்டார்.

இவர் திருமணத்திற்கு பின் நடிப்பதில் இருந்து நீண்ட இடைவெளி எடுத்து கொண்டார். பின்னர் 15 ஆண்டுகளுக்கு பின் இவர் நடித்த ஹிந்தி மற்றும் தமிழில் வெளியான ‘இங்கிலீஷ் விங்கிலீஷ்’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றி அடைந்தது. 2017ல்  ‘மம்’ எனும் இந்தி திரைப்படத்தில் இவர் கடைசியாக நடித்தார். இது அவரது 300 வது திரைப்படம்.

நடிகை ஸ்ரீதேவி நெருங்கிய உறவினர் ஒருவரின் திருமணத்திற்காக துபாய்க்கு குடும்பத்துடன் சென்றிருந்தார். அங்கு திருமணத்தில் ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் என இருந்த அவர் பிப்ரவரி 24 – 2018ல் துபாயில் தங்கி இருந்த ஹோட்டல் அறையில் உயிரிழந்தார். நடிகை ஸ்ரீதேவியின் மரணத்தை தொடர்ந்து அவரது குடும்பம் பெரும் சோகத்தில் மூழ்கியது.

இந்நிலையில் நடிகை ஸ்ரீதேவியின் கணவரான போனி கபூர் தனது மனைவியுடன்  இருக்கும் புகைப்படத்தை அழகான புகைப்படத்தை பதிவு செய்து ”2 ஜூன் 1996 அன்று நாங்கள் ஷிர்டியில் திருமணம் செய்து கொண்டோம். இன்றுடன் 27 வருடங்கள் ஆகிறது” என்று பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். இதோ அந்த வைரல் பதிவு…

 

View this post on Instagram

 

A post shared by Boney.kapoor (@boney.kapoor)